Thursday, 6 September 2018

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

அத்திக்காற்றாட 


அந்தியில் வான்மழை 
பொழிந்தோட
நாற்றிற்குள் நாரை
 குளித்தாட
கெண்டையோடு கெழித்தி
சேர்ந்தோட  
சேற்றுக்குள் சோற்றின் 
வாசம் விழித்தாட
மாமனுக்குள் முல்லை!
வாசம் சேற்றின் வாசத்தை  
 வென்றாட 
வறுமைக்கஞ்சிவற்றுக்கு  
நீராகியோட!
வசதிகாய் ஒர்  வாசம் 
கதிரோடு பேச
புவிவெப்பதோடு  
குளிர்ச்சி உறவாட
 உறவிற்குள் மறைந்த கனவு
 துளிராகியெழுந்தாட
வரபோடுமோதியே  நீர்
 வயலோடு நின்றாட
மடைதிறந்த  வேர்கள்போல்  
உயிர்கொண்டாட
மறுபடியும்  கனவென்று  
உயிரோடு அரும்பி 
மலர்கின்றது!!!!


1 comment:

Unknown said...

உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்