Thursday 6 September 2018

, விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கருணையின்றி   நடக்கின்றாய்
அலையென இழுக்கின்றாய்
மூழ்கிய பின் கரை தொட்டு 
நிக்கின்றாய் !!!

தேய்பிறைக்குள் வந்திடாமல்
தொலைகின்றாய்!  தேய்ந்தபின்
உதிக்கின்றாய்!  நிஐமென
வளர்கையில் பொயோயென 
மறைக்கின்றாய்


மறைந்த  நிலவின் 
ஒளியாகின்றாய்!!

விரைகையில்  தடையாகின்றாய்
தடைக்குள் விழுகையில்  
விரைந்து
வந்தென்னை இழுந்து 
சொல்ல துடிக்கின்றாய்!!!
குருடென நடிக்கின்றாய் 
 விழிசிவக்கையில் அணைக்கின்றாய்!!!

வீதியில் யாரோவாய் விதியென
 நிக்கின்றாய் 
மேதியுடைக்கையில் 
உடைகின்றாய்!!
வேகமாய் மேகமாய்  எனில் 
 உடைந்து  விழுகின்றாய்
காதலாய் நடக்கையில்  எதுகுமே 
இல்லாதப்பிரிவாய்
போகின்றாய்
உன்னாலே
 ஆயிரம் உயிராய்  சிற்பங்கள் 
முன்னாலும் பின்னாலும்
என்னோடு!நிற்பதும் நடப்பதுவும் 
நிழலாகின்றது!!!


No comments: