Wednesday, 10 December 2008

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

எதற்கும் அழதிடா
என் விழிகள் இன்று
அவனுக்காய் அழுதது!

ஏன் அழுகின்றாய்
என நான் கேட்க!
என் விழியே சொன்ன
பதில் கேட்டு! என் இதயமே
வலிக்கு தடா இன்று!

உன்னிடமிருந்து
அவனை ரசித்து மகிழ்ந்த
என்னை நீ மூடாது அவனை
ரசித்த  உன் தவிப்பை கண்டு தானே!
அவன் வரும் போதும்!
போகும் போதும்பேசும் போதும் !
நான் ரசித்தேன் அவனை

இன்று!
 உன்னால் அவனையின்றி
வேறு யாரையும் பார்க்கப் பிடிக்காது
தவிக்கின்றேன்!
அவனை மறக்க என்னால்
எப்படி முடியும் நீயே சொல்!

அதைவிட அவனை ரசித்த
என் விழிகளை குருடாக்கி விடு
உன்னை விட அவனை
காதலித்த நான் இருட்டுக்குள்
அவனை
பார்த பார்வையோடு
வாழ்கின்றேன்........

2 comments:

Anonymous said...

உணர்வுபூர்வமான கவிதை. நல்லாயிருக்கு.

சு.கஜந்தி said...

நன்றிகள்!உணர்வுகள் எப்போதும்
அழகு தான் அதை நாம் அசிங்கப்
படுத்தாத வரை........