Wednesday 10 December 2008

கறுப்புக் கனவுகள்

அடுத்தவர் வாழ்வு தனை
அடிக்கடி எட்டிப்பார்த்து
தன் வாழ்வை சுமையென
நினைக்கும் கட்டுக்கடாங்கா
மனசுகள் கட்டட்டு தவிக்க
விட்டுக் கொடுக்கா இதயங்கள்
மாற்றம் தேடுது இங்கே!!

தவருகளை சொல்லிச் சொல்லி
தவருகள் செய்து தவரும்
இதயங்கள் தவருகளை
நிலையென்று நினைந்து
தவறுது இங்கே!!

குற்றம் கண்டு குற்றம்சொல்லி
குற்றம் செய்து குற்றம் செய்து
சுகமாய் வாழ வெளியே
சுகந்திரம் தேடுது இங்கே!!

தனக்கான மாற்றத்தை
பிறரிடம் தேடி! அருகிருக்கும்
துன்பம் பெரிதென்று
தொலைதூரத்து துன்பத்தை
இன்பமாய் நினைத்து
தொலைகின்றது இதயங்கள் இங்கே

எங்கும் ஒரோ கனவு ஒரோ துன்பம்
ஒரோ வாழ்கையென
எப்போதோ புரியும் போது!
கரைகின்ற வாழ்வை
காப்பாற்ற முடியாமல்!!!
தொலைதூரத்து! கோடிக்
கோடி கனவுகளாய் போவார் அப்போது
!!

2 comments:

தேவன் மாயம் said...

ஒரோ துன்பம்
ஒரோ வாழ்கையென
எப்போதே புரியும் போது
கரைகின்றது வாழ்கை
காப்பாற்ற முடியாமல்!!!

Beutifully written!!!
Deva.

சு.கஜந்தி said...

நன்றிகள்! வாழ்கை எப்போதும் அழகான
பூத் தோட்டம், இருப்பதைக் கொண்டு
வாழும் போது!