Saturday, 11 October 2008

எதனால் இறைவா ?

சின்னச் சின்ன சொல்லெடுத்து
நன்றியென நான் எழுத
வார்தை வந்து வரி தொடுக்க
மறுக்கின்றதே இறைவா! எதனால்

பக்கம் பக்கமாய் நான் படித்த
காவியக் கதையெல்லாம்!
மனித கண்ணீரால் நன்றியேடு
கரைகின்றதே இறைவா! எதனால்

காத்திட வருவாயென
காத்து காத்து கருகிய
இதயமெல்லாம்!
சருகாகி போகும் வரை
காத்திடாது மறைந்தது!
எதனால் இறைவா?

பூமியை நீ மறந்து
மனிதனை மிருமாக்கி
உயிரை உயிரால் குடிக்கச் செய்து
உயிரின்றி நிற்பது எதனால் இறைவா?


கலியுக காட்சியாய் கண்முன்னே
பல கண்ட படி சிதற!
வறுமையும் பினியும்
அழங்கோல வாழ்வும்
வகை வகையாய் தோன்ற! நீ
இன்னும் தோன்றாது இருப்பது
எதனால் இறைவா?

No comments: