என் பெண்ணே சின்னக் கண்ணே
வாழ்வியல் தத்துவமே
வானோர் புகழ் மென்மையும்
பாரதி தோற்ற கவியும்
நீயே தானடி !!
பெண்ணே !கண்மணியே
அவன் மனசை உன் மனசு
ஏற்றுக் கொண்டேன் என்று!
சொல்லச் சொல்லியதால்
நீ உன்னை இழந்து பெண்மையின்
தன்மையிழந்து தனிமையின்
தவிப்பும் வீனடி !1
அப்படியும் இப்படியும்
அறியாத அறியாமை அறிவால்
உன்னை படுகுழிக்குள் தள்ளியே
சிரிக்கும் சமூகத்திற்குள்
நீ மட்டும் பலர் முன்!அடைமொழி
குற்றவாளியாய் !தோன்றித் தவித்து!
இழந்ததை இருளுக்குள் தேடித் தேடி
ஏமாந்து ஏமாந்து உன் மனசால்
உலகில் ஏமாழியாகி நிற்பது
ஏனடி பெண்னே!
ஒரு முறை சிந்தித்து எழுந்து
உன் சிந்தனையால் உனைச் செதுக்கி
துயரத்தை எறிந்து நிமிர்ந்து நில்லடி!
என் பெண்ணே!!
நிலையான அழகை இவ்வுலகில்
படைத்திட வெளியழகை நம்பி
உன் அழகை இழக்காமல் வாழ்ந்திட
எழுந்து நடந்தே விரைந்தோடி வா
என் பெண்னே!!
.jpg)
No comments:
Post a Comment