Tuesday 29 July 2008

காதலிக்கலாம் வா

கருவறையின் கருவாய்
கருவாயிலிருந்து எட்டி
உதைக்கும் உன்னை!!
அள்ளியெடுத்து, முத்தம் கொடுத்து!
உயிர் கொடுத்து வளர்க்க
வெளியில் வந்து எட்டி உதைக்காமல்
காதலித்துப் பார்க்கலாம் வா.


திட்டி அடித்தாலும் முன்னும்
பின்னும் சுற்றி சுற்றி
உன்னோடு வரும் சகோதரியை!
சின்ன சின்ன சண்டை போட்டு
தொலைத்திடாமல்
காதலித்துப் பார்க்கலாம் வா....

மனைவியாக வந்தவளை
காதலியாக்கி!
காலம் முழுதும் காப்பாற்றி
ஓடி ஓடி உழைத்து
அவள் மகிழ்ச்சிக்காய் வாழும்
உன் வாழ்வின் புனிதம்
காலம் முழுதும் களங்கப் படாமல்
காதலித்துப் பார்க்கலாம் வா......

உனக்காய்ப் பிறந்து
உன் மார்பிலும் தோளிலும்
விளையாடி வளரும் மகளின்
ஆசைகளை சுமக்கும்
உன் தாய்மை உள்ளத்தை
காலம் முழுதும்
காதலித்துப் பார்க்கலாம் வா.....

4 comments:

sukan said...

காதல் கவிதைகளில் எனக்கு நாட்டம் இல்லை ஆனால் இந்த கவிதை காதலின் பெறுமதியை மனிதத்தன்மையுடன் பேசுகின்றது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்

சு.கஜந்தி said...

நன்றி நர்மதா...
நான் வாழ்கையை காதலோடு பார்க்கின்றேன் வெறும் உணர்ச்சி தடுமாற்றம் அல்ல காதல்.. ஒரு மனிதன் பிறந்து இறக்கும் வரையும்
அவனேடு கூட வரும் உணர்வு தான்
காதல் இதை பலர் உணர தவருகின்றனர்..
ஒரு ஆணும் பெண்ணும் சேர்வது காதல் அல்ல.. அவர்கள் வாழ்வது தான் அழகான காதல் என நான் நினைத்தால் இப்படியெழுதினேன்

Anonymous said...

நல்ல கவிதை

சு.கஜந்தி said...

நன்றிககள்