Sunday 27 July 2008

மனித தத்துவம்

பத்துப் பேர் காவல் வைத்து
பதவி தனை தான் காக்க
மேடைபோட்டு பேசிக் காத்தான்
அரசியல் வாதி மனித தத்துவத்தை

புதிது புதிதாய் ஆயுதம் வேண்டி
பாது காப்பு கூண்டில் நின்று
அரசு தலைவர் தன் மக்களிடம்
பேசி காத்திட்டனர் மனிததத்துவத்தை

யுத்தம் செய்ய பலகோடி
உள்ள பணக்கார நாட்டில்
வறுமை மனிதனக்கு
உணவளிக்க பணமில்லா
பணக்கார வறுமை தலைவர்
பேசி காத்தார் மனித தத்துவத்தை..

வந்த வழி தெரியா
மனித ஜாதி! ஜாதி வெறி
கொண்டு உயிர் குடித்து
மகிழ்ந்து பேசி காத்தது
மனித தத்துவத்தை....

சொன்ன கடவுளும் அறியாமல்
வந்த கடவுளும் தெரியாமல்
அன்பால் பலியெடுத்து
கடவுளுக்கும் சொல்லி
கொடுத்தனர் மனிதர்கள்
மனித தத்துவதை..

2 comments:

sukan said...

//சொன்ன கடவுளும் அறியாமல்
வந்த கடவுளும் தெரியாமல்
அன்பால் பலியெடுத்து
கடவுளுக்கும் சொல்லி
கொடுத்தனர் மனிதர்
மனித தத்துவதை.. //

ஆழமான வரிகள்.

சு.கஜந்தி said...

நன்றிகள் நர்மதா.. நான் எழுதிய பின்னர் ஒரு ரசிகையாய் என்
கவிதைகளை நானே ரசிப்பதுண்டு அதில்
நானும் ரசித்த வரிகள் இவைதான்.....