Friday 25 July 2008

கடமை

அப்பாவிற்கு ஒர் கடமை
அம்மாவிற்குத் தெரியாமல்!
அம்மாவிற்கு ஓர் கடமை
அப்பாவும் அறியாமல்!
பிள்ளைக்கும் ஒர் கடமை
யாருக்கும் புரியாமல்!

இப்படியேஆழுக்கெரு கடமை
யாருக்கும் அறியாமல்
வந்து சேர!
தனித்தனியே ஆனோம்
பல முகத்தோடு!

கடமையால் குடும்பமாகி
கடமைக்காய் வாழ்ந்ததால்
பொய்யில் சில நேரமும்
மெய்யில் சில நேரமும்
பணத்தில் பாதியும் புகழில் பாதியும்
கடமைக்காய் போக
இல்லத்தில் புன்னகையும்
போலியானது கடமையால்....

கடமைக்காய் வாழ்வு தேடி
வீனாய் போன நாட்களை
கடமையால் வெறுத்து
இன்னும் கடமையாய்
தொலைத்ததை தேடாமல்
கடமை கடமையென
அழைகின்றோம்......

2 comments:

sukan said...

உணர்ச்சிகள் தவற விட்ட வெற்றிடங்களில் வாழ்க்கை திணிக்கப்பட்டு விட்டது. வெறுமை பெரிதாக விரிவடைந்து விட்டது. இயல்பு மரத்துப்போய் விட்டது. அழகாக சொல்கின்றது இந்த வாழ்வின் உண்மையை கடமை என்னும் கவிதை.

சு.கஜந்தி said...

என் கவி வரிகளை சில நேரங்களில் அழமாய் சிந்திக்க வைக்கும் படியாய்
எழுதிவிடுவேண் அப்போது எனக்குள்
ஒரு வருத்தம் ஏற்படுவது உண்டு.....
இதை யாரும் புரிந்து கொள்ளாது போய்
விடுவார்களோ என்று
அதை மாற்றி அழகாய் எனக்கு கருத்து
தந்த உங்களுக்கு எனது நன்றிகள்.....