Thursday 3 July 2008

குடிகாரன்

நிலையில்லா வாழ்வு
இதுவென்று
நிலையில்லா எண்ணம்
கொண்டு
வரையரையின்றி வழி பல
மாறி
தரை விழ்ந்து தடுமாறி
தடம் புரண்டு
தானெழும்ப மதுக் கரம் பிடித்து
தன்னைத் தான் மறந்தான்
அறியாமை மயக்கத்தில்!!



மயக்கத்தால் கண்ட சுகம்
அவனை அழிக்க
வரும் வலி தெரிந்தும்
உடலுக்கு வலி கொடுத்தான்
உள்ளத்தை ஆற்ற தன்
வலி மறந்த அறியாமை
விலங்காய்!!

செய்த பவத்தால் வந்த பாவத்தை
கூடி நின்று ஊர் பார்க்க
குடும்பம் தனை தெரு நிறுத்தி
தள்ளாடி நடந்தவன்
எமனைத் தேடி உயிர்
கொடுத்தான் இறுதிவாழ்வு
புத்தனாய்...

2 comments:

Anonymous said...

குடி பற்றி ஆராய்ச்சி
குவலயத்தில் செய்து
குறையான குணமல்ல
குறைசேர்ந்த நோயென்றே
மனநோயின் மைந்தர்
வழி சொல்வார் வாழ!

உறவோ நட்போ
குடிப்போரைக் கண்டால்
நாடிடுக உதவி
நலம் பெறவே வேண்டி1

சு.கஜந்தி said...

உறவே நட்பே மனதில்
நம்பிக்கையும் உறுதியும்
தன்னில் தானே வைத்திட்டால்
உலகத்தையே வென்றிடலாம்
இதில் நானென்ன நீங்களென்ன
சொல்வதற்கு..