Wednesday 9 July 2008

இது தானா வாழ்கை?

காத்துக் காத்து காதல்
செய்து
பார்த்துப் பார்த்து
வாழ்வமைத்து
கொஞ்சி கொஞ்சி இன்பம்
தேடி
கெஞ்சிக் கெஞ்சி
உறவு கொண்டு! வாழ்ந்திட்ட
நம் காதல் வாழ்வு!
பூமியிலே சொர்க்கத்தைக்
கொண்டு வர..

நண்பர்கள் நமைப்போல்
ஜோடி தேட
அடுத்தவரும் அயலவரும்
நமைப் பார்த்து பொறாமை
கொள்ள
கிண்டலும் கேலியும்
மகிழ்ச்சியும் கோபமும்
மாற்றி மாற்றி நாம் கொண்டு
நம்மை நாம் மறந்தால்
பெற்றோம் முத்தாய் குழந்தை
இரண்டு
நம் வாழ்வின் சாட்சியாய்..

பெற்றேராய் நாம் மாறி
நம்மை நாம் மறக்க!
குழந்தைகள் நமையாழ!
இரவு பகல் கண்விழிந்து
அலுப்பிலும் சலிப்பிலும்
அன்போடு அரவணைத்து
அடுத்தவர் கண் படாது
பாதுகாத்தோம் அவர்கள்
வாழ்வை நம் வாழ்வாய்
நாம் கொண்டு! வாழ்ந்திட்ட
காலத்தின் சொர்க்கத்தை
ஏன் நாம் அழித்தோம்?

உன்னில் சந்தேகம்
நான் கொண்டு
என்னையும் சேர்த்து
கலங்கப் படுத்தி
எரிச்சலும் கோவமும்
நான் காட்ட
இன்பம் போய் துன்பம்
வந்து
மகிழ்ச்சி போய் சண்டை
வர
ஆளுக்கொரு கதை நாம்
பேசி! தப்பின் மேல் தப்புசெய்து
இல்லாத உண்மை தேடி
ஏன் தனிமை காத்தோம்?


இல்லத்திலே இனிமை கொண்ட
நம் இல்லம்
சோகத்தால் இருளில் மூழ்கித்
தவிக்க
காதலால் நிறைந்த நம்
பள்ளியறை தனிமை
காக்க
தனித் தனி அறையை
நாமேன் தேட!
உன்னேடு தூங்குவதா?
என்னேடு தூங்குவதா?
எனத் தெரியாது குழந்தைகள்
தவிக்க!
வேலைக்கு போன நானே
உலகமே உறங்கும் வரை
சுற்றி விட்டு வீடு வர
ஏன் என்று கேட்காது நீ தூங்க
உன்னை புரிந்த நானும்
என்னை புரிந்த நீயும்
எப்படி புரியாது போனோம்!
************************தொடரும்......
புரியாது நாம் வாழ்ந்த
வாழ்கை! எம் மீது
எரிச்சலும் கோபமும்
காட்ட! தொலைத்த மகிழ்ச்சி
தேடி இரு திசை போனோம்
நம் திசை ஒன்றெனத் தெரிந்தும்!
வரட்டு கெளரவம் நம்மை
துரத்த......
குழந்தைகளை அள்ளி
நெஞ்சோடு அணைத்த
கை கொண்டு நான் அடிக்க!
என்மேல் கொண்ட வெறுப்பை
குழந்தைமேல் நீ காட்ட!
குழந்தைகள் தவிக்க
அடுத்தவர் எம்மை
சாமானப்படுத்த! கோபத்தால்
நான் கொதிக்க நம் குடுபம்
வாழ்க்கை தெருவோர வாழ்வாகி
போனது நம்மால்......

தெருவோர வாழ்வை கண்ட
உன் உறவும் என் உறவும்
சமாதான படுத்திட முயன்றதால்
வந்தது புதிய சண்டை!
பணத்தின் பெருமை சொல்லி
உன் உறவு என்னை திட்ட
என் உறவு உன்னைத் திட்ட
பணம் மட்டும் பேசியதால்!
நம்மைப் போல் பொறுமையிழந்த
பிரிவு! நிரந்தர பிரிவாய் நம்மை
பிரித்து செல்ல!
குழந்தைகள் உன்னோடு சேர
தனிமையும் இருளும் இல்லத்தில்
என்னோடு நிரந்தரமானதால்!
தனிமை என்னை வாட்ட
உன்னை மறந்திட மது துணைவர
தவறியது மனது உன்னால்...
என்னால்.. நம்மால்...

.........................

No comments: