Wednesday, 30 January 2008

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆட்சிக்கு ஆட்சி 
செய்யும் யுத்தம்
தன்னினம் தான்
அழிக்க செய்யும்
யுத்தம்!



எல்லைக்கு எல்லை போட்டு
செய்யும் யுத்தம்
எல்லையில்லா மனித
வாழ்வை சிதைக்கும்
யுத்தம்!

வல்லரசின்  வல்லமைக்கு 
 நாட்டுக்கு  நாடு 
வல்லமை காட்டி
அடக்க  செய்யும்  யுத்தம்
வறுமை நாட்டின்
வயிற்றுப்பசி கண்ட
யுத்தம்!

தீவிரமாய்  தீவிரவாதி 
திமிராமாய்
செய்யும் யுத்தம்
மனிதவுயிர்களை 
சுக்கு நூறாய் சிதறக்குடிக்கும் 
யுத்தம்!

பேசிப் பேசி
கரைத்த யுத்தம்
கரைபட்டு போன
சமதானப்பூ புறாவின் 
உத்திரம் குடிக்கும் யுத்தம்!

யுத்தம் யுத்தம்
என மனிதவுயிர்
செய்யும் யுத்தம்
எல்லைக்குள் நிற்காத
உயிர்காத்திடத் தேடும் உயிர் யுத்தம்!

பூமியின் சொந்தமென
வந்தவர்கள் செய்த யுத்தம்
மகிழ்ச்சிகளின் மரண
யுத்தம்!

No comments: