Tuesday, 29 April 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கனவுக்குள்  கண்கள் 

ஏங்க  சற்றும்  என்னை 

சிந்திக்காமல்  போகின்றான் 

அவன்  !!சந்தித்த 

என்  சதோஷமிடங்களை 

சங்கடத்தில்  தள்ளிவிட்டு 

அவள்தான் தன் சதோஷமென்று !

கைகள்  தொடாத்தூரமாய் 

கைகள்  பற்றிப்போகின்றான் 

என்  கைகள்  விட்டு !!

கொஞ்சம்   கவலையும் 

கொஞ்சம் சோகமும் 

கொஞ்சமாய் விக்க  

விழிகள்   என்னை  பாவமாய் 

பார்த்தே  விழித்து  !!!



 


Monday, 28 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் கனவொன்ற ஒன்று 



இருந்தாய்  நினைவில்லை 

அவள்  அழகான  முகம்  மறைந்த 

பின்னர் 

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............

 இதுவரை  இவளுக்கு!  

கேட்டதுக்கும்மில்லை 

கிடைத்ததுவுமில்லை 

வெள்ளைக்காகிதத்தில் 

வண்ணமில்ல சொற்களோடு 

விளையாடி  இத்தனை 

காலமா!  வியக்கின்றாள் 

தனிமை  தவத்தை  எண்ணி!

இருந்தும் !  தொலைத்ததை 

தேடும் குழந்தை  போல் 

விழுந்து  எழுந்து   நடக்கின்றாள் 

தனியாய் ! கண்கள்  அடிக்கடி 

குளமாகும்   

பூக்கள்  பூக்காமல் 

  இதழ்கள் புன்னகைக்க 

 விழிகள் 

வெளிச்சத்தைத்தேட !

விடியல் மீண்டும்  இருளை 

நேசிக்கும்  தானாய் ! 

அதிஸ்ரம்  கைகொடுக்க 

மறுக்கும்  

அன்பு  வேடிக்கை  

பொய் சொல்லி வெறுக்கும் 

சோகம்  மட்டுமே 

 காதல் கொள்ளும் 

வாழ்க்கை  போராட்டம் 

பலமுகங்களை 

பார்த்து   கடக்கும் 

கற்று  தர 

மறுக்கும்  பாடம்போல்  

  பாதை  ஓரத்தே 

எப்போதும்போல் 

முற்செடியாய்  வாடிப்போய்   

தனியாய்  நிற்கின்றாள்   !

என்றாவது  உயிர்  நனைக்கும் 

மழைக்காய் !!!