Thursday, 19 July 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


                                                    என் உயிர் மொழியொன்று 
மலரொன்று பிறந்திறந்து
ஆண்டுகள் கடந்தும் அதன்
அழியா  நினைவுகளை
மெல்ல சேர்த்தெடுத்த
தேய்பிறைக் காற்று
வளர்பிறைத் தென்றல் தெட்டு
முழுநிலவாய் அவளை வரைய!!
ஒளியாகி ஒவியமாகி நிலவாய்
சிரிக்கின்றாள் என்கனவை
ஆண்டுகொண்டு!
கோடைகாலத்துக்காற்று
வசந்தகாலத்தென்றல்
தொட்டு ரோஐா மலர் எடுத்து
மாலையாகி சூடியதால்
இன்று மட்டும் உயிர்பெற்றால் 
என் கனவில் !!இல்ல உலகமதில்
நில்லாத அவள் முகம்! எப்பவும்
அழியா ஒவியமாகியது என் விழியில்………

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


எப்படி சொன்னால் புரிவார்..................


ஆண்டுகள் பல போனதாம்
ஆண்டோடு நானும்
தொலைதாய் காலம் சொல்ல
அதிசயம் எதுகுமின்றி
அசையுது நினைவு கடந்த
ஆண்டின் நினைவுகளை
தொலைத்திட்ட நிமிடத்திடம்
கொஞ்சம் கடன் வேண்டி!!
எப்போதும் எவரும் காத்திட
நினைவை என் உணர்விற்குள்
கொஞ்சம்  அடகு வைத்திட்டு!!
எப்படிச்சொன்னாலும் புரியா
 உணர்வை எப்படி புரியாதவரிடம்
சொல்வதென்பதை  சிறிதும்
சித்திக்காது !!
எப்பவும் பெண்ணின் உணர்வு
எவருக்கும் புரியா உணர்வானதால்
அதை எப்படி சொன்னாலும் புரியாது என்பதால்
அப்படியோ விட்டு!! 
பெண்ணின் சொல்லாக் காதலை
புரிகின்றமனசு!!அது எப்படி
 என்று என்னைக்கேட்காது!
தன்னைக்காக்கும் புரிதல் என்பதால்
சண்டை போடாது!!
தன்னை மட்டும் சிந்துபவர் உன்னைச்சிந்தித்தால்
எப்படி புரியுமென நீ எப்பவும்
 சிந்திக்காமல் நடைபோடு
பெண்ணே!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

                                                                      கலையே!!!


என் கனவில் வந்து
என் கண்ணீர் துடைத்து
என்னைக்காப்பவளே  !நீ
மண் மரணிக்க விண்ணுக்கு சென்று
ஆண்டுகள் கடந்தும் அழிய வரமாகி
எனக்குள் ஏன் வாழ்கின்றாய் !!
நான் மண்ணில் இறந்து
உயிரில்லா உடலாகி நரகதின்
வாசலில் எரிக்கும் தீக்காய்
காத்திருப்பவள் என்பதாலா!! இல்ல!!
உயிரற்ற உடலெடுத்து
இதயமதை அறுத்தெறிந்த
பொய்யான முகங்களின்
புன்னகையும் பாசமும் என்னை
அழித்திடுமென்பதாலா!!!
இருக்கும் வரை பெண் வாழ்வே போராட்டம்
எதைக் கொண்டு
மாற்றுவது பாருக்குள் என்பதாலா!!
இல்ல கற்பனைகள் கவி பாட
நீ சொல்லிடா காமதிற்காய்
அவளை தேடியழித்து முற்சந்தியில்
நிறுத்திடுவார் மானிடரென்பதாலா!!
கடசி
மூப்பது போர் தேடலுக்காய்!
எழுத்தில்லா கதையின் பொருளாகி
இருக்கும் வரை வாசணையற்றதிரவியம்
என்பதாலா!!இறந்தால் 
கிடைக்கும் நினைவுச்சின்னங்கள்
என்பதால் நீ இறந்து
என் வாழ்வு க்கண்ணீருக்குள்
விதியானதே  இதனால்தானா!!