Thursday, 18 August 2011

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பஞ்சதிலும் பஞ்சம் மறக்கா 
பஞ்சனை தலையணையாய்
ஒர் காதல் !
 கற்பனை வார்த்தைக்கு
கைகொடுத்து பசியகற்றி
கனவாய் கதைசொல்லி 
பொய்யுக்குள் மெய்யென 
உயிர் பெற்று
உயிரோடு விளையாடி 
உணர்வு மயங்கி  உறவு  மறத்து
உயிரோடு உயிர் சேர்ந்து
உயிருக்குள் உயிர்பெற்று
உறவாகி கருவாகி கனியாகி
நிறை நிலாவாகி ஒளிபெற!!
குறைகண்டு பணம் தேடி
பதவிபெற்று அசிங்கமாகி
விரட்டிய விதியால்  அவமானச்சின்னமாகி 
அடிவயிறு  வலியாகி முத்தாகி
பூமியில்   பூத்தபோது!!
பசிதுறந்த   கேள்வியாய்
 தலைவிதி தான் நானாகி
பாதையோர அழுக்காய்
உயிர் துறந்த பெண்மைமுன்
மானம் தொலைத்த காமமாய்
பாடம் சொன்னது இது விதியென்று...
யார் இதை நம்புவார்?

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

பலசொந்தம் கூடி நிக்க
சிலசொந்தம் பகைத்து நிக்க
உறவாகி நின்றசொந்தம்
விலகிப்போக !!

விடைதேடிகளைத்த சொந்தம்
ஊரைக் கூட்டி கதைபேச
உயிரில் கலந்த சொந்தம்
எட்ட நின்று கண்ணீர்விட!!

சொத்துகள் சொந்தக்காரராய்
ஆயுள்காலப் பாதபூசைசெய்ய
அழகான தவறுகள் அதற்குள்
மறைந்து ஆறாம் அறிவை காக்க!!

உனக்கும் எனக்குமான மண்ணில்
கற்களும் முற்களும் என்னைத்தாக்க
பூக்களும் புல்வெளியும் உன்னைக்காக்க!!

புரிந்தது எனக்கும் என்னிடம்
இல்லத பணமும் பதவியும்
உன்னிடம் உண்டானதால்
என்னைக்காக்கா அனைத்தும்
உன்னைக்காப்பது!!                 

வாசல்ப்படி

சுறற்றியவேலிக்குள்
சுவராய்பெற்றோர்
கட்டி நின்று காத்தபெண்கள்
 விடுதலை காற்று வீசிய திசையில்
வேண்டிய திசைகடந்து பறந்தால்!!

திசைகள் மாறியவாழ்வில்
சிதைகின்ற குடும்பங்கள்
நித்தமும் உழைத்த ஆண்மகனை
அவமான சின்னமாக்கியகதை
வீட்டிற்கு வீடு வாசல்படியானது!!

வாசல் தாண்டி இல்லாத குறைகூறி
குறையில்லா மகான்தேடி ஓடும் பெண்கள்
விட்ட பிள்ளையால்..அப்பா முருகனாய்
அம்மா வள்ளியாய் நித்தம் நித்தம்
 தேடுவது அப்பாவும் அம்மாவும்!!!

உழைத்து  உழைத்து சேர்த்த பணத்தின்
உயர்ந்த ஆடம்பரம் தேடிய  சந்தோஷம்
 வீடுக்கு வீடுவாசல்ப் படியானது இன்று!!!