Saturday, 5 June 2010

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

துயில்கின்ற   இரவுக்குள்  
உறக்கிடா    விழிகளில்
கரையாத   கனவுக்குள் 
களைகின்ற  இரவைக்கலைத்து 
விடியாது பிறந்த 
என் பிறவாத உதயமோ! 

என் புலராத பொழுதிற்குள்
இருளாகி விளையாடியே 
புரியாத வாழ்வாக்கி
புதிரான விடையாக்கி
விளையாத  விதையாக்கி 
உதிக்காத உணர்வாகி  
என் மனதோடு
மோதி சொத்திட்ட உதயமோ!


என் நெஞ்சாகி  நெஞ்சம கொஞ்சும் 
 மொழியழித்த  நினைவாகி 
கண்ணீராகி  முற்தரையாகி முள்ளாகி 
கல்லாகி கல்பட்ட வலியாகி
கதையாகி கருணையில்லா 
பெண்ணாக்கி கலையிழந்து 
ஒய்வின்றிஒய்ந்திடா  
இதயமான பின் உதிக்காத  உதயமே !!
எடுத்தெரித்து ஒளியிழந்து
இருளுக்குள் சிரிப்பதேனோ....................

Friday, 30 April 2010

கனவிற்குள்.. ஒர் கல்லறை......

உன் இதயவீட்டுக்குள்
விதையாகி....
உன் கண்ணீர்த்துளியால்
அரும்பாகி...
உன் சுவாசக்காற்றால்
உயிராகி....
உன் கனல் ஒளியால்
வளர்ந்து...
உன் வார்தை  கேட்டுப்             
பெரிதாகி....
உன் காதல்மொழியால்
கருவாகி....
உன் மனம் போல்
மொட்டாகி
உன் வர்ணத்தால்
நிறமாகி..
உன்அழகால்    பூவாகி         
உன் மார்வோடு    தலைசாய்த்து
என் விதியோடு கோவப்பட்டு
நொத்து வெறுத்து
உன்னை இழந்து என்னைத் தேடி
உனக்குள் கருகிடும் என்னை
ஏனடா தொலைத்தாய்...................

Saturday, 10 April 2010

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


தேய்ந்தாலும் மறைந்தாலும்
விட்டு விட்டு வளர்ந்தாலும்
வளராது இருளோடு பூத்தாலும் ! 
ஒளியிழந்து தவிந்தாலும்! 
என் காலம் இனிமை 
தராது போனாலும்!
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாத்தாலும்!
தொலைதூரத்து தென்றலாய்
என்னை நீ வதைத்தாலும்!

கண்ணீரை மட்டும்
கண்கள் வரைந்தாலும்
முழுமையின்றி அழிந்தாலும்
திசைகளின்றி போனாலும்
மாறாது விடிந்திடும்
பொழுதுக்குள் உனக்குள்
வாழ்ந்திடும் நிமிடங்கள்
என்னோடு வாழ்ந்திடும்
காலம் வரை என்
இதழ்பூக்கள் என்றும்
உனக்காவே பூக்கும்........
என்றாலும் புரிந்திடு கல்லறை
சாட்சியாகும் வரை தான்........