Friday, 20 June 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

உலகமெங்கும் என் தமிழ்
உயிராய் ஒலித்திட
ஒளியிழந்த  எம் உரிமைதனை
உலகிற்கு சொல்லிட
பொங்கு தமிழேபொங்கு!
எம் உரிமைக்காய்பொங்கு!

உயிர் மேல் பாதம்தனை
எடுத்து வைத்தாலும்
சரித்திரம் படைத்தவர் நாங்கள்
சரிந்திட மாட்டோமென
பொங்கு தமிழேபொங்கு!
எம் உரிமைக்காய்பொங்கு!

மரணமே எம் கண்முன்னே
வந்து நின்றாலும்
சொல்லிற்கும் செயலிற்கும்
அர்த்தம் இல்லா
வாழ்வை நாம்
வாழ்ந்திட மாட்டோம்!
எம் விடுதலை வேகத்தை
குறைத்திடவும் மாட்டோமெனப்
பொங்கு தமிழேபொங்கு!
எம் உரிமைக்காய்பொங்கு!

மனிதரில் நாமேமாணிக்கம்!
எம்மைக் கண்டெடுத்திடா
உலகமே உன்னை
வெல்லும் வரை
எம் உயிரின்
இறுதிப் பயணம் முடியும் வரை
பொங்கிடுவோம்
தமிழால் பொங்கிடுவோம் என
பொங்கு! தமிழென பொங்கு!!

Tuesday, 17 June 2008

இரவின் ராகம்

இரவே உனைத்ச் சந்திரன்
தோற்கடிக்க
விண்மீன்கள் அதைப் பார்த்து
கண்ணடிக்க
நானே தனிமையில்
தத்தளிக்க
என் பாதம் புல்வெளி பனி
மிதிக்க
மிதிபட்ட பனித்துளி
பூவாய் மலர்ந்திட
மலர்ந்திட்ட பனித்துளியை
தென்றல் தழுவ!
தழுவிய தென்றல்
எனைத் தழுவ
தாக்கிய தென்றலால்
என் தேகம் குளிர
குளிர்த தேகத்தை
ஏங்கிருந்தோ வந்த ராகம்
தாக்க
தாக்கிய ராகத்தால்
இருளில் நான் தவிக்க
தவித்த என்னை
சந்திரன் பார்க்க
பார்த பார்வையால்
என்னை நான் தெலைக்க
தொலைந்த எனக்கு புரிந்தது
அல்லிமலர் காத்திருப்பது.......

நதிக்கரையில் ஓர் இரவு....

நதியே..
நீ அழகாய் உறங்க
இயற்கையின் அழகு
உன்னில் விரிய..


சொர்க்கம் கண்முன்னே
வர்ணங்களாய் தெரிய
உன்னிடம் சொல்ல
முடியாமல் தவிக்கின்றேன்
மெளனமாய் நான்...

என் காலடி தடத்தை
சத்தமின்றி பதிந்தேன்
உன் உறக்கம்
கலையாது _ஆனால்
என் கனவை யாரிடம்
சொல்ல....

எத்தனையே அழகு உன்
முன்னே நீயே பார்க்காமல்
உறங்குகின்றாய்!

எனக்காக ஒளி ஏற்றி
ரசிக்க வைத்தவன்
உன்மீது பதியாமல்
போனதென்ன

சின்னதாய் வருத்தும்
அவனைக்காணது என்
மனம் வாடியதை அவனிடம்
கூறிவிடேன்..