இதயசுவற்றில்
இலக்கணம் பிழையானதால்
பல தவறுகள் கற்பனை சுவற்றில்
நியங்களாகின்றது
உன்னோடு ஓடும்
உள்ளமென்னை
விண்னேடு வாவென்றது.
கண்னேடு வந்த
உன்னோட உருவம்
காதலேடு பேசுது இனிதாய்
என்கனிந்த கண்கள்
நியமென நினைக்கும்
நிமிடம் கதையாய்
போனதே வாழ்வில்!!!
நம்மிடம் எதுக்கும்
இல்லையென்பதால் வந்த
ஆசையா!!இல்லை!
ஏமாற்றதால் வந்த ஆசையா!
இல்லை !!
அடுத்தவர் காட்டும்
ஆடம்பரம் தூண்டிய ஆசையா!
இல்லை !!
நம்மால் முடியுமென்ற
கற்பனையின்ஆசையா !!
இல்லை !!
ஆசையின் !ஆசைகளில் மாட்டிய
ஆசையால் வந்த ஆசையா !
இல்லை !!
வட்டியும் பணமும்
கழுத்தின் கயிறாகிட
தற்கொலைக்கு தூண்டும் ஆசையா !
இல்லை !!
கொடுமையானா இறப்பு
நியமென தெரிந்தும்
இறந்தாலும் பரவாயில்லையென்னும்
பணத்தின் மீதே ஆசையா!!!
இல்லை !!
கொண்டவன் கொண்டுபோகும்
பல உயிர் பாவத்தை ஆசையில்
உணரா ஏழையினை
கொள்ளையடித்தே பெருமை
கொள்ளும் பணமே ஆசையா !!
இல்லை !!
ஆபத்தின் கருணையினை
வட்டிக்கு வட்டியாய்
உயிரோடு விளையாடும்
மனிதப்பேராசை ஆசையின்
ஆசைகளே ? !!