Monday, 21 January 2008

அழகு

மழைக் காலம்
உதித்திடும் நிலா
என்றும் இருளுக்கு
அழகு

சூரியன் தோற்றுவித்த
வர்ணத்தில்
என்றும் ஏழு வர்ணம்
வானவில்லுக்கு
அழகு

பூக்கும் பூக்களில்
மணம் கொடுத்து
மனம் கவர்ந்த
மல்லிகைப் பூ என்றும்
பூவிற்குள் அழகு


நீரில் பிறந்து
நீரில் வளர்ந்து
நீரில் சேரா
தாமரை என்றும்
பொய்கைக்கு அழகு

முற்களோடு பிறந்து
அழகால் கவர்ந்து
காதலைப் பாடும்
ரோஜா என்றும் இதயதிற்கு
அழகு

எத்தனை அழகு
இந்த பூமியில்
பிறந்தாலும் எனக்கு
மட்டும் எதையும்
சிதைத்திடா இதயங்கள்
தான் என்றுமே
அழகு..........

Wednesday, 9 January 2008

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அவன் சொன்ன 
மெளனத்தை
அவள் கேட்டு 
மெளனமானாள்

அவன் ரசித்த 
மெளனத்தை
அவள் சூடி 
மெளனமானாள்

அவன் தவிர்த்த  
மெளனத்தை
அவள் புரிந்து 
மெளனமானாள்

அவன் சிரித்த
 மெளனத்தை
அவள் ஏந்தி 
மெளனமானாள்

அவன் கொடுத்த 
 மெளனத்தை
அவள் தாங்கி 
 மெளனமானாள்

அவன் நேசித்த 
 மெளனத்தை
அவள் வளர்த்து 
மெளனமானாள்

அவன் வெறுத்த 
மெளனத்தை
அவள் அணைத்து

 மெளனமானாள்
.... ..... ...... ...... ....... ...... ...... ..... ....... ....

Monday, 7 January 2008

தீயென நீ இரு

தீயென நீ இரு
மூடநம்பிக்கை தீ
தீயில் எரியும் வரை

தீயென நீ இரு
முக மூடியால் முகத்தை
மறைப்பவர் முகத்திரை
கிழித்திட

தீயென நீ இரு
சமூதாய சீரழிவை
வேரோடு தீயிட்டு
கொழுத்திட

தீயென நீ இரு
தீண்டுபவர்கள் தீயில்
எரிந்து சாம்பல் ஆகும்
வரை

தீயென நீ இரு
தீண்டாமை தீயை
தீயால் எரிந்து
உலகை காத்திடும்
வரை....