வலிகள் அதிகமாக
அதை உன்னிடம்தந்தேன் தமிழே
வழித்தோடும் நீருக்குள்
நீ குளித்தாய் அழகாய்
இருந்தும் நம் பாதை
கைப்பிடிக்கா குழந்தை
விழுந்தெழும் நடைபோல்
பிரிவுகள் இன்றி
தொடர்கின்றது !!
வலிகள் அதிகமாக
அதை உன்னிடம்தந்தேன் தமிழே
வழித்தோடும் நீருக்குள்
நீ குளித்தாய் அழகாய்
இருந்தும் நம் பாதை
கைப்பிடிக்கா குழந்தை
விழுந்தெழும் நடைபோல்
பிரிவுகள் இன்றி
தொடர்கின்றது !!
திரும்பிப்பார்க்கின்றாள்
பின்னே! அவள் நிழலில்
உறங்கிக்கொடேகிடக்கின்றதுஅவள் நியம்!!
தவறு என்ன செய்தால்
அவள் தண்டனைக்குள்
சிக்கிக்கொள்ள !விடைகள்
மரணத்தை கைகள்
காட்ட விளங்கா மொழியின்
புன்னகையானால் !!
மரணப்பாதையிலும்
முற்ககளே மனிதவடிவில்
சிதறிக்கிடக்க !!
அவள் கருவில் சிக்கப்படா
பாவத்தின் பிறப்பாய்
வாழ்கின்றாள் !!
நேசம் கூட அவளை
ஏமாற்றும் பொய்கள்
போட்ட வேஷமானது !!
இருந்ததும் அவள் மீண்டும்
ஏமாற அன்பை தேடுகின்றாள் !!
ஒருநிமிடம்! அப்பா
உயிரோடு வந்தால்என் பாதைகள் பூக்களாகும் !!
ஒரு நிமிடம் ! அப்பா
உயிரோடு வந்தால்
என் தூங்கா தூக்கம்
தலைகோதி தூங்கும் !
ஒருமிடம் ! அப்பா
உயிரோடு வந்தால்
மீண்டும் என் வசந்தகாலம்
இசையாகும்
ஒருநிமிடம் !அப்பா
உயிரோடு வந்தால்
சொல்லாமலே எல்லாம்
எனக்கா மாறும் !இல்லை
அப்பா மடி குழந்தையாக
மரணம் வந்தாலும் போதும் !!
கவிதையின் அழகில்
யாரோவாழும்
வாழ்க்கையின் அழகில்
அவள் விழிகளின்
பார்வைக்குள் வாழும்
கண்ணீரும் அழகு !!1
மரணத்தைவிட
கொடுமையானதாமனித மனங்கள்
வாழும்போதும்
புரியவில்லை
வாழ்ந்துமுடித்த பின்னும்
புரியவில்லை ஃ!!
ஆழமான அன்பை
சாதாரணமாய்உடைத்தெறிந்தோ
போனாலும்
இதயம் உடைந்தே
சிதறினாலும் இருந்தும்
நம்புகின்றது மனசு
மீண்டும் காயப்பட !!எல்லா
நம்பிக்கையும் இழந்த
பின்னும் காயப்படுத்தும்
மனசே பாதைவழி !
வேண்டாம் என்றாலும்வேதனைப்பூக்களே
மாலைகோர்க்கின்றது
கழுத்திற்கு ! விதியென
ஊமையாய் நடப்பதா
அக்கினிக்குள் இட்டிடவா
இல்லை!
நம்மையும் தீமையும்
இறைவன் பாதமென
விடுச்செல்லவா ! இறையே
பதில் சொல்லு ...?!!!
தோல்விகள் இவள்
எழுதிக்கொண்ட வரலாறு!முயற்சிகள் இவளோடு
மோதியிலுக்கும் அலைகள் !
வாழ்க்கை இவள்
இறந்த பின் தேடும்புத்தம் !!
இருந்தும் இவள்
யாரோ தேடும் சந்தோஷம் !
கவலை இவளை
மூடிக்கரைசேர்க்கா
நீரின் மூச்சின்
ஒற்றை ஓலை ஓவியம் !
இவளை வரைந்த இறைவன்
போட் கையெழுத்து
இதுவரை யாரும் அழித்திட
முடியா கிறுக்கல் !!!
சிக்கலின் நூலுக்குள்
சிலந்தியின் உணவான
நாட்க்கள் விளையாடும்
விளையாட்டின் பொம்மை
இவளின் உயிரே !!!
உயிரின் வலிதான்
உறவுகளின் வலைதான்இருந்தும் ஏனோ
தனிமைக்கு கண்ணீர்
விழுந்தும் எழுந்தும்
நடந்தும் தூரம் கடந்த்தும்
வீனே ஏனோ கவலை
இருக்கும் வரை வாழ்க்கை
இல்லையென்றால் சரித்திரம்
இதைத்தேடிய
பயணம்
பயனற்றுப்போக்காது
காலம் !!