Wednesday, 29 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இரவல் வெளிச்சத்தில் 

அவளுக்கு  கிடைத்த 

அன்பெல்லாம்!

  அவளுக்கு 

இறைவன்  கொடுத்த 

தண்டனைகளே !

அவளுக்கு பிடித்ததென்றும் 

அவளுக்கு  கிடைத்திடாத 

சாபவழிபிறப்பின்  முடிவு 

  மனிதன் 

அழித்தே  வசைபாடிட 

போடும்  நாடகம்!அவள் 

சிக்கிக்கொண்ட   எதிர்பார்ப்பால்  

அவளே  தேடிக்கொண்ட  நரகம் 

கடக்கவும் 

முடியாமல்  விலகவும் 

முடியாமல்  மாடிக்கொண்ட

சிலத்திவலை உணவே   அவள்!


 

  


குட்டிக்குட்டிச் சாரல்......,

 இதுவரை!  போராடடம் 

எதுவரை!  போகும் 

தெரியா!  மனதிற்கு 

கிடைத்தது  என்னவோ 

 இரவல் !!உயிரின்  ஓசை 

Tuesday, 28 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அவள் பிறப்பின் 
அர்த்தங்கள்!அவளுக்கு 
இறைவன் காட்டிடாத 
கார்மேகக்கலாம் !!
அவளுக்கே பிடிக்கா  
அவள்  வழ்க்கை 
ஆசைகளால் 
தோற்கடித்தே 
அவள் உயிரை  
வதைக்கின்றது !!!
மனசு  வலிக்கின்றது 
மரணம்  தொட  
மறுக்கின்றது 
விதியின்  கையில் 
 ஒற்றை பெண்ணிவளோ !!!
அவைளை 
புரிந்து கொள்ளக்கூடத்தின்  
கைபூவிவாய் உதிர்கின்றான்   
இறை !!
விடித்திடுமா  அவளின் 
வசந்தகாலம்  
மீண்டும்  தோன்றிடுமா 
இல்லை  
தோற்கடித்தே  மரணிக்குமா 
அவளின்  வாழ்க்கைகாலம் !!
 

 

Thursday, 23 January 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஜென்மங்கள்  மூடிய 

ஒற்றை ஜென்மத்து ஒரு 

முகம்  கனவிற்குள்   

பேசிய  மொழிபுரியாமலே  

எனக்குள் மறையாதே 

நிலைத்திருக்கு!!அழகாய் 
 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 புன்னகைக்க  மறந்தவள் 

முகம் பார்த்து  

 புன்னகைக்கற்றுக்கொள்ள 

சொல்கின்றது  குளிர்ககாலத்து

 பூக்கள்"!

Wednesday, 22 January 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 குற்றக்குவியலின் 

நடுவே  மரணித்து 

கிடக்கின்றது  ஒற்றை 

வாசமல்லி  


Tuesday, 21 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சலிப்பும் வெறுப்பும் 

சரிக்கு சரி போராட 

நினைவும்  மறதியும் 

சண்டையிட  பிறந்த 

விதி  பிச்சைப் பாத்திரம் 

கையியில்  ஈட 

என்னை  படைத்த 

 கொடுமையை  ஒரு 

நிமிடம்   இறைவனே 

சொல்லிச்செல்லடா!!

சாதிக்க  பிறந்தவளாய் 

கையில்  தருகின்றாய் 

தருத்திரம்  நீயென 

காதில்  சொல்கின்றாயா 

போராடுயென  பாதை 

திறக்கின்றாய்  முற்களை 

இட்டு கால்களை 

வதைக்கின்றாய்  

தனியே தவிக்கும்  கொடுமைக்குள் 

கொடுமையை 

தருக்கின்றாய்  இருந்தும் 

வாழ் இது நியதிஎங்கின்றாய்!!!
    


 


Monday, 20 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பார்ப்பவர் பார்வைகள் 

சொல்லுவதும்  எடுப்பதும் 

பிழைவழி  பார்வைக்கண்ணாடி  

சரிவழி  இருப்பதும் 

உணர்வதும்  ஒரு 

கோழைக்கொவளை 

மூடுபொருள்  தைரியம் 

 பாசமும்  நேசமும் 

சொல்வதும்  செய்வதும்  

கிணற்று நீரை 

தொடத்துடிக்கும்  கைகள் 

போன்றது   இறந்த  மாயம் 

இருந்தும்  கிடைப்பது !விதி 



குட்டிக்குட்டிச் சாரல்......,

யாருடன் யாரென 
யாருக்கென்ன  தெரியும் 
யார்  சொல்லி 
யார் அழுது  
யார் விதி மாறும் !!

Friday, 17 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தை பிறந்தால்  வழிபிறக்குமாமே 

ஆனால்  எனக்கு  மட்டும் 

வழிகளை பனித்துகள்

  மூடியேவைத்துள்ளது

அதிகாலை  சூரியன் 

உதிக்க மறக்க 

நிலவு மட்டும்  தன் 

ஒளியிழந்து  நிக்கின்றது 

என்  முன்னே 

காலை  மாலை 

தெறியாமல்  போகின்றேன் 

தனியாய்!  கருணையும் 

கடலும்  கறுப்பாய் 

 என்கண் முன்னே இருக்கின்றது

இருந்தும்  முதுமை

  தூக்கம்  தேட 

வயது  கொச்சம்

  ஓய்வை தேட 

ஓடுது  நாட்கள்

 காரணப்பிழையாய் !!

தையும்  போகும்  

 வருடமும் முடியும் 

வாழ்க்கை  சக்கரம் 

 என்  பிழைகளின் 

 கதையாய்  தெடங்கும்  !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இறைவா  !!!

என்னை  கற்பனையில் 

படைத்தாயா  இல்லை 

கனவுலகின்   கனவுவாய் 

படைத்தாயா   இல்லை 

நித்திரையின்  புலம்பலாய்  

படைத்தாயா   இல்லை 

உன்  வெறுப்பின்  கடுப்பில் 

படைத்தாயாய்  இல்லை 

என் முன்ஜென்ம

 பாவக்கணக்காய் படைத்தாயா

எதுகுமே  புரியவில்லை 

இருப்பதற்கும்   வாழ்வதற்கும் 

காரணமும்  புரியவில்லை 

வழியோரம்  வழிதெரியா 

குருடாய்  நிக்கவைத்த 

காரணத்தையாவது  கூறிவிட்டு 

போ  இறையே !!!
  

Thursday, 9 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 விளையாடியே  ஓடுகின்றது 

 நிமிடங்கள் 

வேதனையால்  துடிக்கின்றது 

இதயம்  

என்ன  வரமடி 

உன்  நொடிகள்  என 

என்னிடமே   

சொலிக்கேட்டிடும் 

என் நொடிகள்  

என் மேல்   அன்பில்லா  

வெறுமைக்குள் தவிக்கும்  

என் மனதின் 

சுமைகளை   உணரமுடியா 

 நொடிகளை  

 பார்த்தும்  கேட்டும் 

உயிரைக்கொள்ளும் போதே 

யாருமில்லாக்குழந்தையாகின்றேன்!

கரணங்கள்  தேடிச்சொல்லி 

விட்டுச்செல்லும்  உறவவைபோல் 

என்  நிமிடங்கள்  

காரணமின்றி 

செல்கின்றது என்னை விட்டு!! 

 

Tuesday, 7 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கண்ணைமூடி  

கைபிடித்து 

நடக்கதான் ஆசை 

என் கைகள்  விட்டு 

சென்ற  இடைவெளிகள் 

சொல்கின்றது 

 உன்னை 

காற்றிடையில்  தொலைந்த 

சங்கீதம்  போல் 

மாயத்தில்  தொலைந்த 

கண்ணணைப்போல் 

காலத்திடம்  தொலைத்த 

கண்ணீருற்குள்   ஒரு 

கானல்  விமப்பதை 

கையிடைக்குள்  தேடாதே  முட்டாள்

பெண்ணே  நீயாக   என்று 

விட்டேயோடும்  உன்னை 

கேட்டோடும்  நிழலாய் 

சுமக்கசொல்லுது 
ஒளி !!


Saturday, 4 January 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,


 வருடமே  நீ  புதிதாய் 

பிறந்தாயாமே  எனக்கு 

எப்போது  புதிதாய் 

தெரிவாய்  நான்  இன்னும் 

அப்படியே  !!😌.........

குட்டிக்குட்டிச் சாரல்......,


நம்பிக்கை  தொலைத்தவர் 

மனதில்  கேள்விகள் 

ஆயிரம்    நம்பியதால் 

தொலைத்தவர்  மனதில் 

காயங்கள்  ஆயிரம்