Thursday, 24 October 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மூடிய கதவுகளை உடைத்திட்ட
பெண்மை தனிவழி  தேடிக்கொள்ள
தனியாக நிற்கின்றது கற்பனைகள்
மட்டும்!!
பெண்மை  கற்றிட்ட  முட்டாகளாய்
சித்தரித்தவரோ! சிந்திக்கின்றதே
கதைக்களம்

Bildergebnis für வாழ்க்கைநித்தம் நித்தம் பார்த்தே
சிந்திக்க தவறியே பெண்மை கூடத்தில்
கூட்டமாய் விடுதலையை பேசியே
கற்பனை பொய்களை தன்னில் சுமக்கின்றது
பாதையும் பிழையாக கற்பனையும் பிழையாக
விடுதலை மட்டும் கடனாய் கேட்கின்றது
பெண்ணின் உணர்வுகளை
படைத்தவன் கல்லாக படித்தவன் உளியாக
செதுக்கவே உடைகின்றது உயிரற்றே
இருந்தும் வாழ்கை எப்படி  உயிரின்
 பொதுவிதியில்  எடுப்பதுவும் கொடுபதுவுமாய்
அழிப்பதனாலே  வாழ்கின்றது!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

சிலர் வாழ்கையை இறைவன்
Bildergebnis für விதிமுற்களை கொண்டு எழுதி விட்டானே 
 அழித்திட முடியா வலிகளும் காயங்களுமே 
விதியாகின்றதே!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

தென்றல்  என்னைத்தொட
Bildergebnis für ரோஜாகவலைகள் விழியைத் தொட
உயிரை உயிரோ தொட

விழிகள் முடி இதழ்கள்
திறந்தது  இதயத்தின்
உணர்வைச் சொல்ல  !!! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பலதும் பத்தும்  பதறாய் பறக்க
நியமும்கற்பனையும் பொறுபற்றே
 தோன்ற
Bildergebnis für விதவை தாயும் சேயும் உறவிற்குள்
 புள்ளியாய் இணைத்திடாதே சிதைய
தேவையே பாசமாக

கொடுப்பவரோ உயந்தவராக
 இருபவரோ சிறந்தவராக
இழந்தே கற்பனையில் சிரிக்கின்றது
வாழ்கை
 நம்மை இழந்து  வெளியே!!!



குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிர்பாவை
 உணர்வினை அழித்து


 கற்சிலைக்கு  அழக்காரம்
சக்திதனை  அழித்து
 சக்திகொடுத்திட
அர்சனைகள் கோடி!!

Wednesday, 23 October 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

நினைவுத்துளியணைத்திட
நிலைக்கண்ணாடி ரசித்திட



அழகு நிலா
 மலர்ந்தது மேகத்தையுடைத்து!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தேடித்தேடியழைகின்றாய்
காதலை எங்கோ தொலைந்தது
என தெரியாமலே!! ஒற்றை சொல்லை
சொல்லகிடைத்த நேரத்தை தொலைத்தால்
தேடுகின்றாய்  உன் காதலை!உன்னிடம்
இருபதையறியாமலே!!

உன்னைத் தவிர உந்தன்
வாழ்கை எந்தன்  கையில்யென
எழுந்த  நிமிடம் தொலைந்தால்  தேடுகின்றாய்
Bildergebnis für காதல்உன் காதலை உன்னிடமிருபதையறியாமலே

பக்கத்தில் இருந்ததை பார்த்திட மறந்தே
தூரத்தில் தேடிய கற்பனையால் தொலந்த
உண்மையதனை ஏற்காத நிமிடதால்
தேடுகின்றாய்  உன் காதலை உன்னிடம்
இருபதையறியாமலே

உலகத்தைநினைத்தே உன்னை தொலைத்தே
நினைவில் எழுதி நியத்தை தொலைத்தே உன்
காதலை தேடுகின்றாய்  உன்னிடமிருபதையறியாமலே
வாழ்கையை வெறுத்தே காதலை தனியாய்
தேடுகின்றாய் உன் வாழ்கையே காதலெனயறிமலே!!!

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

நிலவானம் மொழிநிலா
கவிப்பொழுது காணதுடித்த மாமன்
உருவம் கரைகடந்து வந்தேன்
காதல்மொழியெடுத்து

 தொலைந்த வானவில் வர்ணதின்வில் போல்
தொடமுடியாது காதலென காதலை
தொலைத்திட:டு தொலைவான நிலவாய்
Bildergebnis für காதல்கற்னைக்குள் தொலைந்த உருவம்
நியமாய் உயிர்பெற்றதேனே
தனைமறந்து
மரித்திட்ட மரிக்கொழுத்தின் வாசம்
மயக்கிட செய்யத்திட்டதே  மாமன்
கனவிற்குள்  தன்
அறிவினை உயர்வென எண்ணி
அறியாமல் போன காதல்
அறியாமல் அறியாமையாக்கியதே
உணர்விற்குள்  உயிர் பெற்றததே
என் உருவம் காதலாய்

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் கற்பனை பொய்களிலாவது
Bildergebnis für ரோஜாஎன்னை சந்தோசமாக வடிவமைத்து

பொய்யேயெனிலும்  ரசிக்க வைக்கும்
உனக்காய் என் புன்னகையை தருகின்றேன்


குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயக்கோவில் கருவறைசாமியாய்
Bildergebnis für ரோஜாஎன் மாமனே
 நிறைந்து  இருந்தான்
அழகாய் !
 காற்றேடு கதைபேசி
மலரோடு விளையாடி
 தனியான நினைவாக!!
நானேயானேன் மாமன்
பிரிவென்றை தந்ததால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாதங்கள் ஆண்டாக காலங்களின்
கொலைதனில் கற்பனைதலையணை

Bildergebnis für ரோஜாஅணைப்பில் ஏங்கு  கனவு கண்டுகொள்ளா
தேவைகளின் சமாதியில்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழமர விழுதில் ஊஞ்சலாடும்
Bildergebnis für ரோஜாசந்தோசத்தின் ஆட்டம்

நிழலதனின் நிறைவில் அழிகின்றது
வேரதனில் பிடித்துக்கொண்ட பிடிவாதம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எனக்கான சந்தோஷம்
 இந்த மண்ணில் 
 எதுகுமில்லையென 
தெரிந்த பின்னரும்
எனக்கான  சந்தோசத்தை 
எதற்கா என் இதயம்  
எதிர்பார்தே  காத்திருக்கு!


 இது தான் உணர்வோ  
ஏமாறவே   இயங்கி 
ஏங்குகின்றதே  இதயம் 
முட்டாளாய்!!

Wednesday, 16 October 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,



என்னைத் தொலைத்த 
நிமிடத்திலிருந்து
என்னைக்கான தவமிருக்கின்றேன்


மீண்டும் என்னை
 உயிருடன் மீட்டிடலாம்

என்ற நம்பிக்கையேடு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சிந்திக்க சிந்திக்க



தோல்விகளும் சந்திக்க சந்திக்க
வருகின்றது என்னையே!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

விட்டுக்கொடுத்திட முடியாமலே
Bildergebnis für பண்பாடு
விட்டுப்போகின்றது காதல்
கூட்டைவிட்டு 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வயதினைக்கடக்கின்றது 
 உடல் 
மனதினை கடந்திட 
முடியாது
 தவிக்கின்றது முதுமை!!!
Bildergebnis für பண்பாடுதவறுகளை தட்டிச்சொல்கின்றது 
சிந்தனை 
தள்ளிநின்று தவறுக்குள்
விளையாடுகின்றது
 உணர்ச்சி!!
மதித்திடுயென சொல்கின்றது
 பண்பாடு  
பக்குவம் அற்ற மிருகங்களை 
மன்னித்திட முடியாது
தவிக்கின்றது  அறிவு  
இருந்தும்  இதையே  தேடிகாண்கின்றது 
  வாழ்க்கை !!!!

Saturday, 12 October 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

இல்லறத்தின்
 அர்தங்களை கற்பனைகள் 
போட்டு போட்டுஅழிக்கின்றது 
காலத்தின் 
கோலங்களாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தவமாய் தவமிருந்து 
கிடைத்த வரங்கள் கொஞ்சமாய்
கொஞ்சிடத் தேடுவதோ 

Bildergebnis für குழந்தை
 தாய்மடியே !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்ணிமணியெல்லாம் கண்ணீருக்கு
Bildergebnis für ரோஜாமட்டுமே சொந்தமானவர் தானே
சிந்னைகளில் கூட கரைக்கின்றனர்
மணிகளாய்!!!

Thursday, 10 October 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

Bildergebnis für சனி பகவான்சனியவன் கண்களுக்குள் 
காலகாலமாய் சிக்கிக்கொண்ட 
பெண்ணிவளே!

பிடித்தால் விட்டுவிடுவான் 
என்றார்கள்!!
ஆனால்  விடாதே 
பற்றிக்கொண்ட காதலும் ஏனோ

கறுப்பாய் பிறந்ததால் கறுத்தவனுக்கு
கடசிவரை பிடித்த பெண்ணிவளே!
தொடர்கின்றானே பிரியா  நிழலாய் 

படிப்பேயில்லா பமரபெண்ணிவள் ஆனால்
சுற்றுகின்றானே இருள்போல்  இவளோடு  !
இவள் மனிதனைப் படித்திடவே
 சுற்றுகின்றானோ சாபங்களாய் !

பரதேசிவாழ்கையில் எடுத்தே போக
எதுகுமில்லையே   என்றார்கள் இருந்தும்  
ஏன் வந்தான் என்னோடு

 சுற்றினால் பலன் பெற்றிடலாம்
என்றார்கள்  
நான்  அவனை நம்பியே
சுற்றியே முதுமைகொண்டேன்


இருந்தும்  ஏன் என்னை விடாதே
பிடித்தே சுற்றுகின்றான் !!பிறர் தவறை 
பார்ராமல்

யார்யாரே அவனால் உச்சம் காண
உச்சம்தலை விதியாய் என்னையே
பற்றினானே 
பாவமாய்தோன்றுது எனக்கும்!
அவனை எண்ணுகையில்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை தொல்லையென்றவன்
Bildergebnis für நிலாதொலைத்து விட்டு போனான்

இல்லையென்றவன் என் முதுமையின்
கையொன்றானான்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ கிறுக்கிய கனவினை



ரசித்தபடி போகின்றது நிலா

இருளோடு!!!

Sunday, 6 October 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

தேடிப்பார்த்தேன் பிறப்பின்
பாவத்தை தொலைந்தே போனது

Bildergebnis für ரோஜாஎன் தலையெழுத்தின்  பக்கங்கள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தோல்விகளை கண்டு கலங்காதே
Bildergebnis für கானல் நீர்எதிர்த்தே விளையாடியதால்
இல்லையென இருப்பவன் அதனையே
பரிசாய் தந்துகொண்டேயிருக்கின்றான்
எனக்காய் அவன் சலிக்கவில்லை எனக்கு
வாழ்கை சலிப்பானது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை ஏமாற்றியதால் தன்னை
மறைந்தவர் சொன்ன பொய்யினை
Bildergebnis für கானல் நீர்அமதியாய் கேட்டதால் நான் ஏமாற்றியதை
அறியவில்லையென சந்தோசத்தோடு
போனவர் முகம் பார்த்தே அப்பாவியாய்
நின்றுவிட்டேன்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒற்றை ஆசை உயிரியாய்
எனக்குள் தோற்றது !
எந்தனை
Bildergebnis für கானல் நீர்நாள் கனவு அது சட்டென பறிபோனபோது தான்
 எண்ணினேன் யார்  வந்தாலும்
தேற்பதே  என்விதியென!!!