Friday, 29 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உதிர்க்கும் வரை
அழகு தெரியவில்லை
 மனசிற்கு!
எல்லாம் உதிர்ந்த பின்னர்
வலிகள் புரியவில்லை
மற்றவர்க்கு1!  எல்லம்
புரிந்தபின்னர்  வாழ்கையில்லை
என்னிடம் !!ஆண்டுகள்
தொலைத்தும் அழியவில்லை
ஏமாற்றங்கள் மட்டும் எனக்கு1!

Wednesday, 27 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதல்ரோஜாவின்
காதல் மலர்க்கொத்தை
காதல்கொண்ட காதலன்
வேர்ரறுத்தான் வெண்ணீரால்!!
காயப்பட்டு இதழ்கருகிய
ரோஜாவின்  இதழ்கள் மண்ணில்
உதிர்த்த வாசத்தின் வணர்ணங்களாய்
விண்ணில் மலர்ந்தது வானவில்லைப்போல்!!

Monday, 25 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

தாலியென்று ஏறிடாததால்
ஓர்வலி
தாலியென்று இறங்கியதால்
ஓர்வலி
தாலியென்று ஏறமறுத்தால்
ஓர்வலி
தாலியென்று கனவானதால்
ஒர்வலி
தாலியொன்றே வலிகள் தான்
பல!!

Thursday, 14 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரற்றுப்போன
உயிரின் உன்னதத்தை மகனே
நீ சுமந்திடயெழுந்திட்ட போது
ஆதரவற்று நின்றனான்
 பொருள் உணர்கின்றேன்
 உன்னால்!!

Wednesday, 13 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உனக்குதெரியா    உன்
நாணயத்தை எடுத்தவள்  உன்
நாணயத்தைபோல் காதலையும்
 சுமகின்றாள்  நெஞ்சுக்குள்
உன் நினைகளில் தொலைந்து
சென்றவள் !உன்
 நினைவலைகளிலேவாழ்கின்றாள் 
உன்னோடு!!

Tuesday, 12 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனை வீட்டுக்கள்
பொய்யான உறவுக்குள்
தரைதட்டிய தடாகத்தின்
கண்ணீருக்குள் வேர்ரற்ற
ஆம்பல் காத்திருக்கு உதயமின்றி
காயங்களும் வடுக்களும்
அடுத்தவர் அறியா இருளின்சிறை
புன்னகைமுகமாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் உணர்வுக்குள்
ஒரு காதலை  !உயிராய்
எழுதி ஊமையாய்வாழாது
உனக்கான உயிருக்குள்
உணர்வாய் எழுதி உண்மையாய்
வாழ்ந்து பார்!
அதன் நினைவுகள் சேர்த்திடும்!
உன்னோடு!!

Sunday, 10 August 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

என்னைத் தொலைத்தநிமிடம்
உன்னைக் காணத் தவித்த
நிமிடம்!
எனக்குள்தாய்மை  வந்த நிமிடம்
 நீ மலராய் மலர்ந்த
 நிமிடம்!
என்னை மறந்த நிமிடம்
நீ என்னைப் பிரிந்த
நிமிடம்!
நான் இறந்த நிமிடம்
நீ யில்லா வாழ்வை
வாழமுடியால் தேற்ற
 நிமிடம்!


Saturday, 9 August 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


நம் வலிகளினால் 
உறவைத்தெலைத்து
உலகை மறந்தேன்!!
நம்  வலிகளில்
உன்னைத்தொலைத்து
என்னை மறந்தேன்!!
பிள்ளையின்  வலியால்
கல்லாய் சமைத்து
உயிரை மறந்தேன் !!இன்று
முல்லை அருப்பு
கொஞ்சி சிரிக்க
 புதிதாய்உணர்வு
என்னுள் கண்டேன்!!
இருந்தும் தனிமைக்காயம்
எழுதியதீர்பில்அன்பின்
 ஏக்கம்  இழந்தவலியை
உணரக்  கண்டேன்!!
முதல்முறையிவ்வுலகில் 
நீயிலையென
உணரக்கண்டேன்!!
உணர்வு பேசமொழிகளால் 
மெளனமனேன்    உன்னால் !!!