Sunday, 6 January 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

படைத்தவன் எழுதியபக்கத்தை 
திருத்திட எண்ணி  
அழித்திட  முடியாபக்கத்தை
எழுதியே  அழுகின்றாள் 
அழிந்ததை  எண்ணி  
அழித்திட்ட  அவள்  
அவளை  எண்ணி
இருந்ததையும் தொலைத்து
இரவு பகல் அழுது 
எடுத்தது என்ன
கொடுத்தது என்ன  
வந்தது என்ன என 
சிந்தனை செய்து 
இருந்த வாழ்க்கையில்!
இருப்பதை விட்டு
 நடப்பதை விட்டு
வருவதைவிட்டு
 கிடைப்பதை விட்டு
விட்டு விட்டு 
போகும்வாழ்கையில்
எதைத்தடுக்க  ஓர் ஆட்டம்
எதை விரட்ட ஓர் ஓட்டம்
எதை அள்ள ஓர் போராட்டம்........என 
முடிந்த  பின்  சிந்திக்கின்றாள் !!

No comments: