Tuesday 22 January 2013

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அப்பாவி


 என்கண்ணில் விழுந்தெழும்
தினக் கனவின் தொல்லை நீ
என் உறக்கத்து   விழிதுறக்கும்
சாமத்து குழந்தையின் அழுகையும் நீ
என் உயிரில் கலந்தோடும் உணர்வுகளை
ஒரு நொடியில் துன்புறுத்தும்
துயரம் நீ 
இருந்தும் தனிமைக்குள்  சிறையாகி
 கொஞ்சமும் விழகாது  
என் எதிரில் வம்புகள்  செய்வதும் நீ
நடக்கும் போது திரும்பிப் பார்கையில்
என் நிழலுக்குள் ஒழிவதும் நீ
சமைக்கும் போது பிழைக்கும் உணவில்
தொலையும்சுவையின் ருசியும் நீ
எழுதும் போது பிழைக்கும் சொற்களில்
 குழப்பம் செய்வதும் நீ
தடுத்தும்  நிற்காது தினம் தேடும் 
என் மனதினையெடுத்ததும் நீ
பிரித்த போதும் எனனக்குள் துடிக்கும்
இதயமாய் இருப்பதும் நீ 
இருந்து விழுந்து என்னைச் சேர 
கண்ணீர் துளி நீ
இருந்த போதும்
என்னைப் புரியா  அப்பாவியும் நீ




No comments: