Tuesday 4 December 2012

வாமன்னன்

எதுகும் சொல்லாது
என்னவென்றும் சொல்லாது
உள்ளத்தை பிழிந்து நீ
எதற்கு மாமா உருப்படியி்ல்லா
ஆட்டத்தை ஆடுகின்றாய்!!!

விளையாடிட  நானிருந்தும்
உன்னோடே சேர்ந்திருத்தும்
உனக்காய் வாழ்ந்திருத்தும்
 தவமாய் நினைத்திருத்தும்
ஏன் மாமா தனித்தே ஆடுகின்றாய்

அடி யே !!பைத்தியமே
 படிக்காத பட்டிக்காடே
பகுத்தறிவும் பக்குவமும்
பதவியோடு உள்ளவளுக்கே
சொந்தமொன  அருக்கானி தேடினீ
ஏன் மாமா புதிதாய் அழைகின்றாய்!!

பாதையோடு போறவளை
பாதியிலே வழிமறித்து பாதியிலே
நின்ற உறவை  பாதையிலே
 சொல்லி  வீனே  ஓர் நாடகம்
எதற்கு மாமா போடுகின்றாய்!!

சொத்திட்ட உணர்விற்கு ஒரு
துளிநீர்  போதும் மாமா!! உன்னை
என்னைப் பிரித்திடும்காலம்
எப்பவும் வானும் மண்ணும்
தான் மாமா !!
உன்னை யோ எண்ணி
என்காலம்  முடிந்தாலும்
யார் காலத்தையும் அழிக்காதே
என் மாமா!!

உன்னையோ நம்பியவளை
உறவாக்கி ஒதுக்காதே
ஆசையில் தோல்சாய்பவள்
ஆசைகளை வேசமிட்டு காக்காதே
வேதணையை க் கொடுக்காதே
பொய்யான மனிதனாய்போர்வைக்குள் ஒழியாதே !!
 வீரத்தோடு நீருந்தால்
முற்களிலும் என் முகவரிகிழிந்திடாது
இருக்கும் மாமா...........................

No comments: