Tuesday, 30 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வெற்றிபெற்றவர்கள்


 

கைகளில் திறமையாளன்

வெற்றிபெற்றால்

வெற்றி  பெற்றவன்

வெற்றியின் பாதையின்

ஒளியின் வழிகாட்டியாகின்றான்

எப்போதும்!!!தன்னை 

புரிந்தவனே  இன்னெருவர்

வெற்றியின் பாதையாவான்!!

அதுவும் தன்னை 

நம்பியே பயணிப்பனே

இன்னெருவரை வெற்றியின்

ஓளியில் நிறுத்திட முடியும எப்போதும்!!

நாம்  தோற்க்கும் 

மனிதனின் வெளிச்சமானால்  

நம்  திறமையின்  

பாதைகள் அழகாகும்!!!

Friday, 26 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வறுமைக்கு  பிறந்த

 மகளானேன்!



வார்த்தைகள்  பேசிடா 

கவியானேன்!

ஊமையின் காதல் 

பூவானேன்!

உயிர்விட்டு சென்ற 

உடலானேன்!

உள்ளம் சிதைந்த

மெழுகானேன் !

 இதயம் உடைந்த

துடிப்பானேன் !

கண்ணீர்பேசிடும் 

கண்களானேன்!

வெள்ளிநிலா பார்த்தே 

 பசியை மறக்கும் 

குழந்தையானேன்!

இழிவுபடுத்தி உயர்வு கொள்

 மனிதனுக்கு  பகையானேன்!

பாசமென்று   பாசங்கு செய்து

ஏமாற்றி வாழ் மனிதனுக்கு 

முட்டாளானேன்!

 இருந்தும்  எனக்குள்  

ஒடும் வேகம் மட்டும் 

மாறவில்லை என்றும் !

இழந்ததை  விட்டு 

அடுத்தது  என்ன

 என்றே   கேட்கும் 

நம்பிக்கைக்கு  உயிரானேன் !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

  ஓற்றையாய் தட்டுதடுமாறி

நிக்கையிலே  

ஒரு உயிர்  கூட நடக்கையிலே  

வந்ததுயரம் கூட நம்மை 

எதுகும் செய்யாதே ஒடும்

அழகின் வடிவமாய்  

அன்பின் உச்சமாய்

புரிதலின் கைபிடியாய்  

தடைகளின் காப்பாய்  

காயத்தின் மருந்தாய்

குளிரின்வெப்பமாய் 

தாமையின் மடியாய்

எம்மேடு எமக்காய் கூடவே 

எம் பயணத்தின் கைகாட்டியானால்

எம் பயணத்தின் அழகே 

எம்மை கண்டெடுத்த உயிரின்

வெற்றி!!!வெற்றியின் புள்ளிகளிலே

மனிதன் தன்னை தேடுவதால்

தோல்வியின் புள்ளிகள் கைவிட்டு 

மரணிக்கின்றது!!!