Thursday, 22 September 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உண்மைக்காற்றினை உண்டு
உண்ணா உண்மையை
எண்ணா நம் உணர்விற்கு
இன்னா தம் அன்பினை
வெல்லாத் தமிழே இருதயநாடியுண்டா
உனக்கு!!!

சொந்திற்கு பட்டெடுத்து
பகடான பளபளப்பை
பத்திக்கு பாலாக்கி சொல்லுக்கு
கண்ணீரான தமிழே இன்றைய
சொல்லுக்கு உணர்வுண்டா
 உனக்கு1!!!

வெற்றிக்காய் வீரனாகி விடிவெள்ளிக்கு
புதையலாகி மந்தைக்கால் குழிக்குள்
விழ்ந்த தமிழேமனித புத்திக்கு புரிந்த
விடுதலை உணர்வுண்டா
உனக்கு!!!

சிந்தனை சிலிர்பிற்குள் சிம்மாசனமிட்டு
 கற்றவர்   உச்சிதலை கர்வத்தின்
மகுடத்தில் சிகரம்கண்ட தமிழே உட்காத்து
ஆட்சி செய்ய அரியசமுண்டா
உனக்கு!!
பக்கத்தில் இருந்தும் பசிப்பன் சட்டிக்கு
உணவழிக்கா பக்குவமற்றவர்
பக்கத்தில் படுத்துறங்கும் தமிழே
உன் சொந்த குரலின் உரிமை சட்டிக்கு
விடுதலைகிடைப்பது எக்காலம்!!!!




குட்டிக்குட்டிச் சாரல்......,

அந்தரத்தில் அந்திமந்தாரை 
அந்திசாயும் நிமிடம்
அழுகின்றது அக்கரையற்ற
இக்கரைகாற்றினை முக்கரையும்
உணர்ந்து!!!!!

Tuesday, 13 September 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கள்ளத்தனதை கண்களாய்
வைத்து  அவள்
உருவத்தைவெட்டியெடுத்து
 விழிசமைத்து அப்பாவிவாய்
வேடமிட்டு  நின்றான் மாயவன்!!!

அவன் அப்பாவிக்குள்ஒழித்த
கள்ளத்தனதை அப்படியே
அப்பாவியாய் பற்றி  அவன் மாயதின்
மானுக்கு புள்ளிவைத்தால் அவன்
கண்களின் வித்தைக்கு விந்தையாய்!!

அவன் சிந்திக்கா சிகரத்தின்
சிந்தைக்குள் வித்தை செய்து
மாயவன் வித்தையை சிந்தையாக்கி
விதிக்கு விடைகொடுத்தல்  மந்திரமாயமற்ற
தந்திரத்தை அன்னையிடம் பெற்று!!

மந்தை மாக்களின் மந்திமனதை
மந்திரகோலின்றி கட்டியவளுக்கு புரியாத
மாயவனின் மந்திர புன்னகைக்கு
மத்தியில்  சிக்கிய தந்திரத்தின் மாயம்!!!

இருந்தும் இன்னும் மாயவனின்
மாயவுலகத்து மாயமாய் அவன்
இதயத்தின் முற்களில் அழகிய ரோஜா
அசைந்தாடு சுவாசத் தாலாட்டில்......................