Thursday, 29 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

உன்னைத் தொலைத்தாய் 
நீ
 எண்ணிய காலம் 
என் கண்கள்
அழுதிட மறந்திட்ட காலம்
 உன்னை
 புரிந்திடாது 
நான் 
 பிரிந்திட்டதாய்  
நீ 
வருந்தியகாலம்  
என் சோகங்கள்  
என்னை 
போர்வையாக்கிய காலம்
உன்னை
 நான்  மறந்தாய்
 நீ 
திட்டியகாலம்  
என் 
காதலை உன்னால் 
உணர்த்திட முடியக்காலம் 
என் 
காலதிற்குள் உன்னையன்றி
யாருமே வந்தில்லை 
 என் 
ஜென்மங்கள்கடந்தும் 
என் 
இதயவாசல் திறப்பவன்
 நீயன்றி யாறுமில்லை!
இருந்தும்
உன்னைத்தொலைதே 
நான் 
வாழும் காலம் 
இறைவன் எனக்காய் 
தந்த வரம்!!
கருணையேடு இறைவனுக்கு 
நன்றிசொல்கின்றேன் !!
உன் 
சந்தோஷத்தை
என்
 வாழ்கை பாலைவனத்தில் 
கருகிடாது காத்தற்காய்!!!!


Wednesday, 28 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கனவிற்குள் நிழலான ஓர்
ஓவியம் என்முன்னே 
உயிராகி நிற்ககண்டு அடடா
தொலைத்திட்ட மகிழ்வெல்லாம்
எனி எனக்கே எனக்கா வந்தென்று
கற்பனையில் சில காலம் 
கண்னோடு மறைத்ததுண்டு
தன்னை தான் மறந்திட்டபாவியிவள்
உண்மைக்கு நிழலாகி பொய்யிற்குள்
தான்விழுந்து  ஏமாற்றம் தனைக்கண்டு
துன்பத்தை அணிந்தபோது 
காலத்தின் கண்ணீர் சொன்னது
பாலைவனத்திற்குள்
 தாகத்தின் தண்ணீர்
என்றுமே ஊற்றாகாதென!!

Monday, 26 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நியவுலகத்தை தொலைத்து
விட்டே கனவுலகத்த்தில்
துயில் கொள்கின்றோம்! தட்டி
திறப்பது மதியென்றால்
வறுமையும்  வறட்சியும் வாழ்வை
ஜெயிந்திட பயந்திருக்கும்!!
எழுதியவரும் சொன்னவரும்
தோற்றபின்னே  புதியவர்
அனுபமாகின்றார்!!!
வாசிக்க பயந்தவன் வாழ்வை
 தொலைத்து புத்தகதை  காக்க
வாசித்து புரியதவன்  புத்தகதிற்குள் வாழ்வைத்தேட
தேடத்தெரிந்தவன்  தன்னைத் தொலைத்து
புத்தகமாய் வாழ !வாழ்கை
 நம்பிதொலைகின்றது  கையிருந்தும்
முடமானவன் போல!!!