Monday, 6 May 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

 அவன் ஒற்றை பார்வைக்காய்

தவம் இருந்தவிழிகளா இவைகள்

இப்போ  அவனை போலவே

கண்மூடியே  காணமறுக்கின்றது!!!

என்ன விந்தை



இதயம் கண்ட  வலிகள்  பேசிய

மாசின் கண்ணீர் புரிந்ததுவோ

விழிகளுக்கு !!!நிமிடம் பிரியா

வரம்கேட்ட விழிகளே 

கோடியுகக்குருடாய்  வாழுகிறது

அவன் கண்ணெதிரே வந்தபோதும்

Saturday, 4 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பொத்தியே வைத்தே 

முடிச்சுப்   போட்ட  உள்ளம் 

மூச்சிக்காற்றின் வெப்பத்தில்

 முல்லைப்பூவாய் வாடியே 

போச்சு  

கட்டிக்காத்து கதைகள் 

பேசிய    உள்ளம்



 கருணையற்ற திறவுகோலால் 

மண்ணோடு போச்சு   

முட்டி மோதி பார்க்கின்றது 

காற்று   உள்ளம்  பேச 

உயிர் காற்று  உண்மையற்ற

ஊமையானது ! 

மிச்ச மீதி கேக்கு பொய் 

அச்சப்பட்டு பேசமறுக்குது 

உண்மை !!1


Thursday, 2 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவள் விழிகள் அழுது 

உறங்கிடாதே  தவிக்குது 

 அவன் மரணித்தால் !

அவள் வலிகள் 

தோல்களின்றி அழுகின்றது 

அவன் மரணித்தால்!

 

அவள் கைகள் பற்றிடாது 

தவித்தே அழுகின்றது 

 அவன் மரணித்தால் !

அவள் இதயம் 

ஆசைகளை  இழந்து 

அழுகின்றது 

அவன் மரணித்தால் !

அவள் மனசின்  கனவுகள்

புதைந்தே  அழுகின்றது 

அவன் மரணித்தால் !

 அவன் மரணம் அவளை 

மரணிக்கும்  மரணமானது 

அவள் வாழ்க்கைக்குள்!!!