Wednesday, 31 December 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 திறமைகள்!

என்னவென்று 

தேடிப்பார்தேன்  

ஒவ்வேறு

மனிதனின் 

 அறிவும் 

ஒவ்வேறுவித 

புரிதலின் 

வடிவில்  திறமையாகின்றது  

 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஐந்தில் தனித்தவள்  

ஐம்பது கடந்தும் அன்பிடம் 

தோற்றே அன்பைத்தேடுகின்றாள்

அவளுக்கு கிடைத்திடாதே 

தோற்கடிக்கப்படும்  அன்பு 

மண்ணில்  புதையும் போது 

சிலநேரம்  பூக்குமோ 

அவள்   உயிரற்ற  உடல்மேல்  

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 காலத்தின்  கண்ணாடியில் 

விழுந்துடைந்த 

கடிகாரம் அவள் 

துடிப்பற்று  நின்ற

  சந்தோஷ துளிகளை  

கையேந்த

காத்திருக்கின்றாள் 

 கருணையற்ற இறைவன்  

அவளை  புரியாமல் 

விட்டுவிட்டான்!! 
  

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆண்டவர்  ஆண்டாண்டு 

கற்றுக்கொடுத்த 

தேன்சுவை அமுதை  

அமுதென  கொண்டாடிய 

கொண்டாக்கலாம்  பொருளற்று 

பிழைப்புகாய்  பிழையானதால் 

துன்பப்பட்டு  துயரப்பட்டு

அழுகின்றது  அயலவன் 

கையில்  அமுதென  

அம்மாடியோ!  இன்று 

அறிவிவுக்களம் அமர்க்களப்பட்டு  

 ஒற்றை மனிதகுலத்தை 

 தட்டித்திறக்க! துடிக்குது    

குறையில்லா 

மதனித  அறிவு  மூட்டையை!!

குறையுள்ள  மனிதனை 

படைத்த  இறைவன்  மட்டும் 

அழுத்திட  ஆளைத்தேடுகின்றான் 


Saturday, 27 December 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இறைவா !!

சுமையின்  அளவுகோல் 

தெரிந்தால்  சொல்லுங்களேன்!

கொஞ்ச காலம்

 கும்பகரன்  வாழ்வை  

கடனாய்  வேண்டிட !!

வாழ்க்கை  வேப்பங்கயாய் 

கசந்தாலும்    கொஞ்சம  

தூக்கமாவது  கைபிடித்தே 

நடந்தால்  மீதிக்காலம்  

ஓய்வாய்   மரணித்திடும்  அல்லவா 

கருணை  கடலாம்  நீங்கள் 

கடசி கண்திறந்தவது  

எரித்துவிட கூடாத !

 

Tuesday, 9 December 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொட்டது  கெடட்து 

என  சொல்லிக்கேட்டு 

தொடாமலேயே  விட்டது  

சொன்னது  என்னிடம் 

எல்லாமே  உனக்கு  மட்டும் 

கெட்டதுவேயென  இருந்தும் 

வாழ்க்கை  சொல்லுது 

நல்லதுவும்   வருமென !!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நமக்கெதிரே  ஒருவன் 

வந்து  எதிர்நிற்கும்   வரை 

தெரியாத  கெட்டவன் 

நம்மோடு  நிற்கும்  வரை 

நல்லவானாவது  எப்படி?

தன்  இனத்தை  நேசிக்கும் 

நல்லவனே  அதிகமாய் 

தன்  இனத்தை  இழிவுபடுத்தி 

நல்லவனாகின்றான் !

எங்கே!  கற்றுக்கொடுத்தது 

தமிழ்  இழிவு பொருளை!! 

தேடல் அதிகம் கொண்ட 

அறிவாளிகளே  அதிகம் 

இழிவுபடுத்தி  உயர்கின்றனர்  

தன்  இனத்திற்குள் !!1

Wednesday, 3 December 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அன்பென்னும்  உயிர் 

உயிர்கொள்ள  ஒரு 

அழிவு  தேடும்  சமூகம் 

அன்பென்னும்  சொல்லை 

சுயநலக்கொள்வனவு 

செய்தே  விற்பனை செய்கிறதேன் !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒவ்வெரு முறையும்

வெவ்வேறு  அழிவிற்குள் 

மனிதன் சிக்கும் நிமிடம் 

தவிக்கும்  மனசு  நிலையாக 

நிலைத்தாலே  நிலையாகும் 

மனிதம்!

இயற்கை எழுதி  

தேடாப்புனிதம்  

மனிதம்தேடிக்கிடைக்கா 

இறைவன் !எழுதும் அழிவு 

தோற்கும்  விருஞ்ச்ம் 

உலகம்  படைக்கும்  உண்மை !!
 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மேடைபோட்டு  வார்த்தை

விளையாட்டில்  விலைபேசும் 

மனிதவுரிமை 

யுத்தம்  ஒரு மௌனத்தின் 

மாற்றத்தால்   ஒவ்வேறு  

மனிதனுக்குள்ளும்  பேசுகின்றது 

நாளைய  விடுதலையை !!