Friday, 28 July 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓற்றைச்சொல்லுக்குள் புதைத்து

எறிந்துவிட்டுபோகும் பலகோடி முகமே

தெருவேர வாழ்க்கை

Thursday, 27 July 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 எனக்கான மண்ணில் என்

முகவரிக்காய்  போராட்டம்

முகவரியிருந்தும் அன்னியபெண்ணாய்

சொந்தமண்ணில்!!

 சுற்றுலாப்பயணியாய்

பணத்தை கட்டுக்கட்டாய் கொடுப்பவன்

முகவரிகள் மட்டும் வெளிச்சத்தில்

உரிமையற்ற நிலம் கூட

 உரிமையாகின்றது  சிலநெடியில்

வாழமுடியா இடந்தில் 

பலகோடிசொலவில் வீடுகள் 

அனாதையாய் உயர்ந்தே கிடக்கின்றது

போகும் பாதையேரம் இறந்தபின்னே

நிழலாய் மாறிய நிழல்கூட மனிதர்கள்

விழிகளில் ஆச்சரியமானர்கள்

யுத்தம் பறித்த  தமிழ்

என்னைபோல் அங்கே

முகவரிதேடியழைகின்றது அர்த்தங்கள்

புரியாமலே தாய்மொழி விற்பனை சந்தையில்

முதல் தரப்பெருமை 

அரசியல் சந்தை நன்றாகவே பேசி

விற்பனை செய்கின்றது!!!

வெளிநாட்டுத்தமிழ்  தன்னைமட்டும்

சிந்தித்து  இருபதையும் கெடுக்கின்றது

நாடு எனது உரிமை மட்டும் இல்லை!!!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அன்பைகொடுப்பதில் இல்லை

வாழ்க்கை அதைவிட பெறுவதில்தான்

மகிழ்ச்சி யென  முதல்

முறை கிடைத்தபோது புரிந்தது

எனக்கு !!

அன்பு என்னவெல்லாம்

செய்யுமென இதுவரையறியாமல்

ரணங்கள் வார்த்தைகளை

கொன்று திண்று

வாழ்க்கை கைபிடியற்று தரையில்

சருகையாய்  போட்டு

தன்னம் தனியாய் கிடந்தவள்ச

முதல் முறை நட்புக்கள் கைபிடித்தே

சூழ்ந்தபோது புரியாத நிமிடங்கள்

பூத்திட  பூத்திட்ட ஆசைகொண்டாள்

ஆனால்!  மீண்டும்  

விதி பிரித்தே தனிமையாகிட்டது!!!

வாழ்க்கையை விதி வட்டமிட

மீண்டும் அனாதையாய் வாழ்க்கை

மரணத்தோடு சண்டையிட்டே!

வாழச்சொல்கின்றது!

Saturday, 15 July 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 வெப்பத்தின் உச்சம்

வேர்வைத்துளிக்குளியல்

அச்சச்சோ !

என்னடா கொடுமையென

சினந்திடும் நிமிடம் நீர்தடாகபட்டு

தொன்றல் தரும்  முத்தம்  அழகு!!!


Friday, 14 July 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நாட்கள் கடகடவென ஓடிக்கொண்டது

மண்தந்த சின்ன சின்ன் ஆறுதல்களை

சிதறடித்தே நாட்கள் 

கடந்தே போனெ  துரத்துதனியாய்  

மீண்டும் வரவேற்கின்றது

பணத்தேடும் பணக்கார யுத்தம்

இங்கே பக்கத்தேயிருந்தும்

தூரமாய் பெய்யும் அன்பு மழை

காணாமல் போகும் உணர்வு இறந்தே

தேடும் ஆடம்பரபோராட்டம்

அதிகாலையும்  இரவும் ரசனையற்றே

தனியாய் கடக்கும்  

எல்லோரும் ஒரு பொய்யில்

அழகாய் தெரிவார்

மனமட்டும் சலிப்போடு ஒரு கனவை

சுமக்கும் மீண்டும் வந்திடலாம் 

என்ற நம்பிக்கையாய் இருக்கும்!!!




Wednesday, 12 July 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என் வனத்திற்குள்  எந்த

வெளிச்சக்கூடுகளுமில்லை

என்னை மனிதன் 

தெரிந்துகொள்ள!!

Sunday, 9 July 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 அன்னையவள் மடியில்

சிலநெடி வலிகளை கண்ணீராய்

ஓடவிட்டது அவளும் அறிவாள்

என்றாலும் உணர்வுகளின் தாகம்

தலைகோதிய விரல்கள் போட்ட

தூண்டில்!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஏழ்மை பெண்ணிடம்

ஓரு நம்பிக்கையின் ஓளியைக்

கண்டேன 

இழிவுபடுத்திடும் கண்கள் 

கண்டுகொள்ளா தன்நம்பிக்கை ஒளி

அவர்கள் போராட்டக்களத்தில்

தோல்வியடைந்தவளாய்

அவர்கள்  துணிவின் முன்!நான்!!

இழந்தவை கற்றுக்கொடுக்க 

இருப்பவர் ஏமாற்ற 

தனக்கென தனிபாதையில்

நடக்கின்றார்கள் !ஆச்சரியம்

பெண்னுள்  தேடப்படாமலே

நிறைய பக்கங்கள் 

இருளேடு மறைந்தே புதைகின்றது

கைபிடித்திட யாருமில்லையென்ற

கவலைகளை. காலடியில் போட்டே

துணிந்தே சொல்லும் இவர்களே

புகழப்படவேண்டியவர்கள்!!!ஆனால்

இகழபட்டே. மடிகின்றனர்!!

இதற்க்குள் ஆண்மை கொஞ்சம்

குளிர்காய்கின்றது!!!தற்பெருமைக்காய்!!!

Saturday, 8 July 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓவ்வொரு முறையும் என்னைபற்றி

சிந்திக்கும்பொழுது. எத்தனைபெயர்

அருகேயிருந்தாலும் ஓரு வெற்றிடம்

நிரப்படாமலே. கிடக்கின்றது!!!

Monday, 3 July 2023

குட்டிக்குட்டிச் சாரல்

  ஒற்றை பயணம் ஒற்றை

இசையை நிமிடத்துளியை

களவாடிக்கொண்டது உந்தன் 

நினைவுகள்  எத்தனை தூரம்

எந்த இடம்  எங்கு சென்றாலும்

நமக்குள் இல்லை பிரிவுகள்

என  சொல்லிகொண்டது  இசை



Sunday, 2 July 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................


 நீண்ட பாதையெங்கும்

நீயும் நானும்

நீண்ட வலிகளை எதிர்த்தே

நடந்தோம்

நமக்கான  பாதையில்

நம்மை தவிர யாருமில்லை

நமக்கான வாழ்க்கைக்குள்

உனக்காகவே என்னை எடுத்தாய்

எனக்கான நீயாய் இல்லாமலே

கொஞ்சம் சண்டை கொஞ்சம்

கோவம்  கொஞ்சநேரம் கடந்தால்

மறந்தே போய்விடும்   நாம்

எதற்கா சண்டையிட்டோமென

உனக்கான பாதையின் தொடக்கம்

எனக்கான  தனிமையின் தொடக்கம்

இப்போ நான் தனியாய்

நீ தனியாய் நமக்கான

பாதையில் நமே இல்லை

என்கைபிடித்திட்ட 

நீ தூரமாய் போனாய்

 நானோ

ஏனோ  வழியோரம்

ஏமாற்றம் என்பதை ஏமாமந்திடும்

பயணத்தை நீ தொடங்கிட்ட 

நாட்கள் கூறியதை உனக்கான

நான் புரிந்திடாமலே தொலைத்திட்டேன்

என்னை!!!