Sunday 4 January 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்............

கானல்நீர் கண்ணீர்துளியால்
வானவில் வர்ணம்தொட்டு
ஓவியமானேன்  சோதனையில்
ஓர்சுகமானநினைவாய் நான்வாழ!

வாசனையற்றமலராய் வாசமலர்வளர்தேன்
வசந்தமற்ற வசந்தங்களான
வாழ்வின் வசந்தை ரசிக்க!
அப்படியா என்றவர்அள்ளியெறிந்தசேற்றால்
அழிந்திட்டது  ஒவியம்!
எல்லை கேட்டை தீயால் வரைந்து எரிகின்றேன் எதிரியும் வேண்டாமென!
இப்படியே
விட்டுவிடு பொய்யான மனிதா!
 ஊர்க்கதைசொல்லி உறவுக்கதைசொல்லி
 உதவாக்கரையாய் சந்தேகக்கதை கட்டி
  புதுக்கதைதேடிஎரித்திடாதே  என்னை!

பொறுமையிழந்தவர் அக்கினியானால்
சாம்பலேமிச்சும்!!சத்தியதின்வழி இதுவோ!


2 comments:

Unknown said...

கவிதை சாரல்கள் இதயத்தில் இதமாய் விழுந்தாலும்..........வாசிக்கும் கண்களில் மழை வருகிறது.

சு.கஜந்தி said...

நன்றிகள்!!