Saturday, 24 August 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

எடுத்து நடந்து
 எந்தனிக்கமுடியவில்லை
எவரிருந்தும் எந்தவலியும்
போகவில்லை
படுத்துறங்கிட கண்களும்
பழகவில்ல
துரத்திவரும் துயரங்களும்
நிற்கவில்லை
ஓடியுழைத்தும் சங்கடம்
தீரவில்லை
அம்மா அப்பா கண்ணீருக்கும்
அர்தம்புரியவில்லை
தனிமை சுட்டாலும்
சிக்கல்கள் விலகவில்லை
நோவே வந்தாலும்
ஆறுதல்சொல்வாரில்லை
புரண்டு சுழலும் நாவிற்குள்
விழுந்த காயம்ஆறவில்லை
நடக்கும் பாதைவழி
முற்கள் மறையவில்லை
இருக்கஇருக்க
கொடுமையும்மாறவில்லை
இன்னும் இன்னும் கூட்டிக்கூட்டி
சுமையை ய் வாழ்வதற்கு இந்த
கூட்டுதான் எதற்கு இறைவா!!

No comments: