Sunday, 26 October 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


ஒர் ஜென்மப் பூ.............

கற்பனையும் கனவும்
நமைச் சேர்க்க
வானவீதியில் நீயும்
மண்தரையில் நானும்
பிரியா உறவாய்
பிரிந்தே வாழ்ந்ததால் !!
உன் பிரிவு
கொஞ்சம் கொஞ்சமாய்
எனைத் தாக்க!!
என் இதயம்கொஞ்சம் கொஞ்சம்
வலியால் துடிக்க!
 நினைவுகள்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னைவாட்ட  !
என் இதழிருந்தும்
மலரா மலரானேன் உன்னால்.....
ஆனால் இன்று!
மீண்டும் உன்னைக் கண்டு
மகிழ்ச்சி பூவாய் ....
இதழ்விரித்து
 மலருக்குள்!
மலராய் மலர்கின்றேன்

என் வரவை கண்டு
எனைப் பார்த மலர்க் கூட்டம்
கொஞ்சம் வாடிபோனது
ஏன்னென நான் கேட்க!!
எங்களுக்கு சொந்தமென நினைத்த
பனியும் மழையும்
தென்றலும் கதிரவனும்
எனி உன் உறவைத் தேடுமே
என்ற ஏக்கத்தோடு................

Saturday, 25 October 2008

தர்மம் வேண்டும்....

தரணியில் தொலைந்த
தர்மம் மனிதர்களால் தேடிடும்
தர்மம் தன்னைத் தானே!
தொலைந்து விட்டு இன்று
தேடுது!! வேண்டுமென்று!!

தலைவர்கள் கையில்
தவழ்ந்து கொண்டும்
கோடிகளை கண்டு பேசிக் கொண்டும்
தன்னைத்தானே தொலைந்து விட்டு
இன்று தேடுது!! வேண்டுமென்று


மேடைப் பேச்சில் வாழ வைத்து
யுத்தம் செய்து காத்து நிற்க
கடவுளோடு தோன்றி
கடவுளோடு மறைந்த தர்மம்
தன்னைத் தான் தொலைந்து விட்டு
இன்று தேடுது!! வேண்டுமென்று

தரணியியெங்கும் வேண்டும்
தர்மம் தேடும் தர்மம் !!
நிந்தம் பூக்கும் பூவாய்ப் போல்!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

சொல்லமே சொல்லம்

முத்து முத்து தமிழை
நீ விட்டு விட்டு பேசுகையில்!
என் இதயம் சிரிக்குதடா உன்னால்..

கட்டியணைத்து பல கதை சொல்லி!
என்னை கட்டிப் போடும்
உன் அன்பில்! ஆயுள் முழுதும்
சிறைப் பட்டு வாழ தோனுதடா
என் மனசு உன்னால்...

விட்டுப் பிரிந்து நான் போன போது
உன் முகச்சோகம் கண்டு!
வாடித் தவிந்து இயங்காது
நின்றதடா என் இதயம் உன்னால்...


மீண்டும் வந்து சேர்ந்து
பேசிச் சிரிந்த போது!
என்னோடு தோன்றி வாழ
ஆசை கொண்டதடா
ஓர் உலகம் உன்னால்.....


உன்னைக் கட்டியணைத்து
முத்தம் கொடுத்து சொல்லி மகிழ்ந்து
நிக்கும் போது இந்த உலகமே
நீயென்று ஆனதடா எனக்கு....

Thursday, 23 October 2008

நீ சொல்வாயா?

வெண்மேகமாய் வந்து
எனைக் காக்கும் என் மேகமே!
நீ அப்பப்ப கருமேகமாய் என்னை
மூடி நிற்பது! சரிதானா என நீ சொல்வாயா?


துளித் துளியாய் துறல் போட்டு
என்னை நதியாய் நனைத்த
என் மழையே !நீ அப்பப்ப
வெள்ளத்தில் மூழ்கடித்து
தவிக்க விடுவது!சரிதானா என நீசொல்வாயா?

பூங்காற்றாய் என் மீது வீசும்
பூந்தென்றலே என் வாசம் சுமக்கும் நீ
அப்பப்ப சுறாவழிக் காற்றாய்
சுழட்டி அடிப்பது சரிதானா என நீ சொல்வாயா?


வெள்ளை வெள்ளையாய் என் மேல்
படந்திட்ட என் பனித்துளியே!
தேன்துளியாய் நானிருக்க
அப்பப்ப தேனவளை மண்ணுக்குள்
சரிந்திடச் செய்வது சரிதானா என நீ சொல்வாயா?

Sunday, 12 October 2008

யார் தவறு?

எல்லை போட்டு
எல்லை போட்டு
அவளை அடைத்து

காதல் கொண்டு
காதல் கொண்டு
அவளை ரசித்து

கிண்டல் செய்து
கிண்டல் செய்து
தனிமை கொடுத்து

ஆதரவு காட்டி
ஆதரவு காட்டி
அடிமையாக்கி

உறவைச் சொல்லி
உறவைச் சொல்லி
பொய்யாய் வாழ்ந்து

பெண்ணைப் பேசி
பெண்ணைப் பேசி
நெந்து போவது தான்
ஏனோ?

Saturday, 11 October 2008

வர்ணம்

அவள் உதிர்ந்த வர்ணம்
கையில் ஏந்தி
அவள் வெறுக்கும் வர்ணம் தனை
தவிர்த்து
அவள் வாழும் வர்ணத்தில்
கலந்து
அவளை விரும்பிய வர்ணத்தில்
வரைந்து
அவள் நேசிக்கும் வர்ணமாய்
மாறி
அவள் ரசிந்த வர்ணத்தை
தேடி
அவள் தேடிய வர்ணத்தை
நேசிந்து
ஏழு வர்ணத்தைப் போல்
காலத்தில் கரைந்திடா வர்ணமாய்
காலமுழுதும் இணைந்திட்டான்
அவளோடு........

எதனால் இறைவா ?

சின்னச் சின்ன சொல்லெடுத்து
நன்றியென நான் எழுத
வார்தை வந்து வரி தொடுக்க
மறுக்கின்றதே இறைவா! எதனால்

பக்கம் பக்கமாய் நான் படித்த
காவியக் கதையெல்லாம்!
மனித கண்ணீரால் நன்றியேடு
கரைகின்றதே இறைவா! எதனால்

காத்திட வருவாயென
காத்து காத்து கருகிய
இதயமெல்லாம்!
சருகாகி போகும் வரை
காத்திடாது மறைந்தது!
எதனால் இறைவா?

பூமியை நீ மறந்து
மனிதனை மிருமாக்கி
உயிரை உயிரால் குடிக்கச் செய்து
உயிரின்றி நிற்பது எதனால் இறைவா?


கலியுக காட்சியாய் கண்முன்னே
பல கண்ட படி சிதற!
வறுமையும் பினியும்
அழங்கோல வாழ்வும்
வகை வகையாய் தோன்ற! நீ
இன்னும் தோன்றாது இருப்பது
எதனால் இறைவா?

Thursday, 2 October 2008

பிறப்பு

வாழும் போது அறிந்திடாப்
பிறப்பு
பிரிவு வந்தால் துடிக்கும்
பிறப்பு
கோவத்தால் அழியும்
பிறப்பு
அடிமையாக்கி ரசிக்கும்
பிறப்பு
ஏழையை ஏழனம்
செய்யும் பிறப்பு
இறப்பை கண்டும் மாறரிடா
பிறப்பு
இறப்புக்குள் மட்டும் அடங்கும்
பிறப்பு
இறந்து இறந்து வாழுது
பிறப்பாய்.................