Thursday, 3 October 2013

நீ உணர்வா இல்லை மயக்கமா !!!

காதலே நீ
எங்கே  இருக்கின்றாய்!!
எதை!!
 இந்த மனிதன் காதலெங்கின்றான்
புரியாத உள்ளம் ஒன்று
தெரியாது தேட!!
அழகான உருவம் கண்டு
கண்கள் தொடுப்பது காதல்!!
தெரியா உள்ளதை அறியாத
உருவங்கள் மாற்றுவதுகாதல்!!
புரியாத மொழியிலும் மொளனமாய்
தேன்றுவது காதல்
அப்பாவி உருவத்திற்கும்
அடிதடி உருவத்திற்கும்
நம்பிக்கை கொடுப்பது காதல்!!
அப்ப வழிமாறி தடமாறி
 வருவது என்னவென்றேன்!!
அதுகும் காதலென்றனர்
இதுவென்ன குழப்பம் காதல்
உண்மையா பொய்ய  என வந்தது
சிந்தனை வழியோரம்
வழிமாற ஞானி
சிரியாது கூறினார்
காமத்தை வென்றிடமனிதன்
உணர்விற்கு கொடுத்தமொழி
காதல் இதை  காதலென்று
எண்ணாதே !!தொடங்காது முடியாது
அழியாது காதல் மண்ணுக்கும்
விண்ணுக்கும் சொந்தம் பெண்ணே
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்
சேராது தவிக்கு  ஒர் நேசம்
இந்த  உணர்வுக்குள் தோற்குதம்மா
கலியுலகம்!!!!

Thursday, 26 September 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

சொர்க்கத்தில் அடிகப்படாத
பத்திரிக்கை நம் காதல்
யார்யாரையோ குற்றவாளியாக்கி
நம்மை தேடுது தொலைந்தபின்பும்!!!


Thursday, 12 September 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பட்டும்  விழுந்திடா

பட்டா மரத்தை சுறாவழி 
உரித்தெறிந்த உதிரத்தில்
 சிக்கிய வையமும்
உரமாகி விழுந்தெழுந்து
விழுதாகி மண்ணிலிருந்து
சுற்றிபடர்கின்றது  பட்டமரத்தை !!
தலைசாய்த்த
மரம்  உடையாது
ஒடியாது நிக்கின்றது உணர்வற்று
போனாலும்!!! வற்றிய குளத்தில்
பற்றிடா பசுமைபோல்!!
விழுதாகி தளிராகி 
தலைநிமிர்ந்த வோர்களுக்காய்!!