Sunday, 13 February 2011

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,



காதலால் வந்த காயத்தால் 
தோற்ற மோதலால் வந்த 
ஊடலால் கொண்ட கோவத்தால்
வந்த வாதத்தால் பெண்ணோடு
தொலைத்த வாழ்வை மீட்டிட 
காயத்தை ஆற்றிட தேற்றிட
மீண்டும் வாழ்ந்திட தேடலாய்
வந்த பெண்ணின் கூடலான பாசம்
காதலாய் மாறி மாற்றமாய் தோன்றி
மாற்றமில்லா ஆணையும் மாற்றுமென்றால்

காதல் கொண்ட கோபத்தால்
வந்த மோதல் தான் வேண்டுமா?
கூடலான  கோடிக்கணக்கில்
தேடலாய்  தொலைந்த ஆணைனின்     
 காதல் மொழி   வீசும் வார்த்தையும்         
வையத்துள் எந்த  பெண்ணையும்   
மோஷமாய் தேற்றி அழித்திடும் போது

இங்கே யார்மீதுதப்பு சொல்வாய்?

மீண்டும்  மீண்டும்  பூத்திடம் காதல்    
 மாற்றமே இல்லாமல் தேடி
வந்திடும் மனிதா நீ தோற்றாலும் 
வீணோ வாட்டமாய் பேசி 
வார்த்தையாய்   தொலைந்து  
உணர்ச்சியாய் அழிந்து 
ஜடமாய் வாழ்திட  காதலில்லாத் தேசமெது?

மனிதனோடு காதலும் 
பெண்மையோடும் வாழ்வும்
பூமியோடு ஈர்ப்பும்    உள்ளவரை         
 உள்ளத்தை  எங்கு தொலைத்தாலும்    
உன்னையோ தொடரும் காதல்
காமந்தை வென்று காவியே அனிந்தாலும்……………..

Friday, 11 February 2011

உதிர்ந்தாடிடா என் மதியோ………



எழுதுகோல் ஏந்திய
எழுத்தில்லா சித்திரதிற்குள்
புரியா கவியாகிய என் 
புதுமைத் தந்துவமே!!

புதுமைக்கு புதுமை சொல்லி
இனிய வாழ்வை எட்ட வைத்து
எட்டவோ நின்றாலும் நீ என்றும்
முழுநிலவோ!!

நிந்தனைகள் நின்மதியை
நித்தம் நிறைத்தாடினாலும்!!
என் மதி யோடு நின்தனை செய்ய
உன் மதியில் நின்றாடும் நின்மதியாய்
வந்தாடும் என் பொழுதுக்குள் நீ என்றும்
முழு நிலவோ!!

விட்டோடிடும் காலத்திலும் 
விட்டிடா வலிகள் வந்தாடிடும்
பொழுதுகளில் என்னோடு
புன்னகைக்கா உன் மதியை விரட்டியாட
சொல்லியாடும் என் பொய் கூட 
புன்னகைக்காக உன் மதியை வீழ்ந்திட தான்!!!
என்றாலும்!!! நீ என் முழுநிலவோ!!

என்னில் வந்த கனவினை
 உன்னில் வைத்து
உன்னோடு விளையாடினாலும்
என்னோடு தோன்றும் கோபம் கூட
கதைபேச கண்ணின்மணி நீ சிரிக்க தான்!!
என் அழகை ரசிக்கா உன் மதியை
ரசிக்கும் என் மனதிற்கு என்றும்
நீ முழு நிலவோ!!!!!!

Saturday, 1 January 2011

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


முடிந்த வருடம் விட்டுச் சென்றதை
வந்த வருடம் வொல்லித்தொடர
கனிந்த கனவு களைத்து சென்றதை
புதிய கனவு விட்டுத்தொடர
கற்ற காயம் தத்த வலியை
பெற்ற காயம் வாடித் தொடர
தொட்டு விட்டு உடைந்த மனசு
எண்ணி எண்ணி உறுதியாய் தொடர
கரைத்த காலம் தந்த வயது
தனாய் கூடியே தொடர
ஏமாற்றம் அனுபவமாய் மாற்றி மாற்றி
மாற்றமாய் தொடர 
மாற்றங்கள் மாற்றத்தால் 
மாற்றத்தைத்  தேடித்தேடி தொடர
பிழையாகி சரியாகி வாழ்வு 
அழிந்தழிந்து தொடர்ந்தாலும்
இறைவனின் கணக்கு மட்டும்
வாழ்வோடு சரியாக தொடர்கின்றது
மாற்றமே இல்லாது…………………………