Saturday, 29 April 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

புத்தி சொல்லி சொல்லி
தவறுகளை செய்வதால்
புத்தி தொலைத்த மத்தியாய்
சந்தியில் நிக்கின்றோம்1!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொலைத்து தொலைத்து
தொலைகின்றவாழ்கை
தொலைவான
நினைவணைக்க ஏங்குவதால்
தொலைக்கின்றது  புன்னகை
நாட்களை!!!

Thursday, 27 April 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

தேய்பிறை காலத்து நினைவு
சில நெடி வளர்பிறையாய்
தாலாட்ட கனவுகள் கருகிய
மலர்த்தேட்டதில் சில அரும்புகள்
சிலிர்கின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாருக்காய் வந்தாய்
எதற்காய் என்னை ஏமாற்றினாய்
வலிகளை பெரிதாக்கி
 உயிரை சின்னதாய்’
 ஏன் தந்தாய்
இருந்தும் இல்லா வாழ்கைக்குள்
தள்ளாடடும் பட்டமரத்தின்மேல்
 வர்ணத்தைகொட்டிவிட்டு மழைநீரில்
 ஏன் தள்ளினாய்
தவறுக்கு காரணத்தை யாரிடம் கேட்க
 நீயேவந்து பதில் கூறு!!!

Wednesday, 19 April 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

திறமை இருந்தும் தவறி 
திறவுகோலைதொலைத்திட்டு 
திறந்திட்ட கற்பனைக்குள் திறவுகோலை
 திறம்படத்தேடி  வடித்திடும் கனவு
திறந்த வானில்  மேகம் வரைந்துசொல்லும்
ஆசையாகும்!!!!

Monday, 10 April 2017

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,

வாழ்த்துகள்  தந்து
வாழ்கையை வாழ்ந்திட
சொல்கின்றாள் என்னையும்  அன்னை
ஏனோ தெரியாது!!!

உண்மையை நேசித்து  
உன்னையே நீ வென்றிடு 
சத்தியதின் வழியாய்
என்றென்னை வாழ்த்துகின்ற
என் அன்னையால் !
வாழ்கின்றது வாழ்கை
ஏனோ தெரியாது!!!

உறங்கிடும் நிமிடம் தவிர
உறங்காகப்பாசம் கொண்டு
என் அன்னைக்கு மகன்களாய்
என்னை தந்தெடுத்த மாமானுக்குள்
 ஆயிரம் வாழ்த்து மாமியேடு  எனக்காய்
ஏனோ தெரியாது !!!

ஒன்றை தாய் சுமப்பில் 
ஒன்பது தாய் அள்ளிசுமக்க 
அத்தனை பாரமும்
மறந்து வாழசொல்லுது அன்னைகளின்
வாழ்தென்னை ஏனோ தெரியாது !!!


சுற்றிய நட்ப்பாய்
 என்னை சுற்றி வலம்வந்து
என்னை தாய்யாக்கிய
 என்மகள்களின் மகன்களின் உணர்வில்
  என் உயிரின்  மூச்சுவலம் 
வருகின்றது வாழ்த்தாய்
ஏனோ தெரியாது !!!

மருமகன்களாய் வந்து  
மகன் களாய் தலைப்பாகையின்றி 
தலைசுமக்கும் தலைமகன்களின் 
பாசத்தால் வந்த வாழ்த்தால்
என் கண்ணீரில் மலர்கின்றது வாழ்கை வசதமாய்
ஏனோ தெரியாது !!!

அதிகாலை உறக்கம் கெடுத்து
அதிகாரம் பாசகொண்டு அன்பைாய்
வாழ்த்தி விட்டு அவரமாய் மறைந்த
நண்பனால் வாழச்சொல்கிறது வாழ்கை!!!
ஏனோ தெரியாது !!!

எத்தனை துயர்வந்தாலும்
 தன்னைத் தொலைத்து
என்னை காக்கின்ற இதயதிற்கு 
தெரியாமலேயே 
போன தியகத்தின் வழி வாழ்த்தாய்  என்னைவாழச்சொல்கின்றது
 ஏனோ தெரியாது !!!


Sunday, 9 April 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

வெயிலாய் நீயிருந்தாய்
மழையாய் நான் வந்தேன்
வானவில்லாய் தோன்றியது
வாழ்கை !!
வண்ணங்களை
அள்ளிக்கொள்ள கையினை நீட்டினே
நெடியில் மறைந்தது கனவு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இந்த பிறவின்  அதர்தங்கள்
தெரியவில்லை
 இந்த பிறவி ஏனென
 தெரியவில்லை
துருவங்கள் கடந்த துயரங்களை
திரிந்தவன் யாரொன தேடியும்
 தெரியவில்லை இருந்தும் வாழ்கை
இல்லாச் சுவாசத்தை வீசுகின்றது1!!