Tuesday, 29 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்ஒவ்வொரு கற்பனைக்குள்ளும்
தொலைத்தவன் நீயே யென்பதால்
என்வாழ்வின் தொலைத்த வெள்ளை
காகிதங்கள் யார்கையிலும் வர்ணங்களாகாது
மடிக்கபட்டு கிடக்கின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வொறு தியகத்திற்குள்ளும்
 சுமையின்வலி அழுதுகொண்டே
வாழ்கின்றது!யாரோ ஒருவரின்
நாளைய வெற்றிக்காய்
தன்வாழ்வை காணிக்கையாகிய படி!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிறக்கும்போதே இறப்பென்பது
நிச்சக்கபட்டாலும் ஏனோ
ஒவ்வொரு இறப்பும் ஒரு பாறையின்
சுமையாய் இதயத்தை அழுத்திக்கொண்டே
இருக்கின்றது !!மரணம் அணைக்கின்ற  போதே
வலியும்அணைகின்றது

Sunday, 27 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,


உன் பிரிவு என்  இதயத்தின்
நோய்யானதால் என்உயிர்
துடிப்பின்றி தவிக்கின்றது
நான் உனக்குள் உணர்வாய் கலந்தது
நீ  பிரிந்த பின்னர்  எனக்குப் புரிகின்றது
என்னை விட்டு பிரிந்த உயிராய் எனக்குள்
நீயே வாழ்ந்தாயென்று!!

Sunday, 20 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை பிடித்து விட்டாது
என்னோடே தொடரும் சனிபகவானே!
என்னையழித்து எடுத்து கெடுத்ததை
உன்னைப்பிடிக்கா என்னிடம்
கொடுக்கும் வரை
 என்னைக் கை விட்டிடாதே!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வொரு தோல்விக்குள்
வரும்ஒவ்வொரு ஏமாற்றதிற்கும்
எதிரே கடத்திட முடியா மலையாய்
என்முன்னே நீயோ தான் நிற்கின்றாய்
எப்போ நீ ஓளியாய் மிளிர்வாயே
அப்போ! உன் ஒளின் வழி நானாய் இருப்பேன்
 இறையே!

Wednesday, 16 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

எப்படித்தான் கோவம்கொண்டாலும்
எவ்வளவு காலம் பிரித்தாலும்
ஒரு நெடி நீ அருகிருந்தால் என்னை
உனக்கானவளாய் மாற்றிச்சிரிப்பது  எது!
நமக்கு மட்டும் ஏன் !இப்படியோர் விதி
புரியாக்குழப்பத்தில் காலமெழுதிய
காயம் நாம்தொலைத்த சந்தோஷமாய்
தொலைகின்றது!!!!


Friday, 11 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

போனீர் தேனீர் நான் போட
வாரீர் காத்துக்கண்கள் அழுது
ஏமாத்து வடியும் போது!
இருந்தும் காத்துக்கொண்டே
இருக்கின்றேன் ஒருநாள் 
நமக்காக விடியுமென்று!!