Tuesday, 29 July 2008

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கருவறையின் கருவாய்
கருவாயிலிருந்து எட்டி
உதைக்கும் உன்னை!!
அள்ளியெடுத்து முத்தம் கொடுத்து!
உயிர் கொடுத்து வளர்கும் 
தாய்மையை !
வெளியில் வந்து எட்டி உதைக்காமல்
காதலித்துப் பார்க்கலாம் வா!


திட்டி அடித்தாலும்
முன்னும் பின்னும்   உன்னோடு 
சுற்றி சுற்றிவரும் 
சகோதரியை!
சின்ன சின்ன சண்டை போட்டு
தொலைத்திடாமல்
காதலித்துப் பார்க்கலாம் வா!

மனைவியாக வந்தவளை
காதலியாக்கி!
காலம் முழுதும் காப்பாற்றி
ஓடி ஓடி உழைத்து
அவள் மகிழ்ச்சிக்காய் வாழும்
உன் வாழ்வின் புனிதம்
காலம் முழுதும் களங்கப் படாமல்
காதலித்துப் பார்க்கலாம் வா!

உனக்காய்ப் பிறந்து
உன் மார்பிலும் தோளிலும்
விளையாடி வளரும் மகளின்
ஆசைகளை சுமக்கும்
உன் தாய்மை உள்ளத்தை
காலம் முழுதும்
காதலித்துப் பார்க்கலாம் வா.....

Sunday, 27 July 2008

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


பத்துப் பேர் காவல் வைத்து
பதவி தனை தான் காக்க
மேடைபோட்டு பேசிக் காத்தான்
அரசியல் வாதி மனித தத்துவத்தை

புதிது புதிதாய் ஆயுதம் வேண்டி
பாது காப்பு கூண்டில் நின்று
அரசு தலைவர் தன் மக்களிடம்
பேசி காத்திட்டனர் மனிததத்துவத்தை

யுத்தம் செய்ய பலகோடி
உள்ள பணக்கார நாட்டில்
வறுமை மனிதனக்கு
உணவளிக்க பணமில்லா
பணக்கார வறுமை தலைவர்
பேசி காத்தார் மனித தத்துவத்தை..

வந்த வழி தெரியா
மனித ஜாதி! ஜாதி வெறி
கொண்டு உயிர் குடித்து
மகிழ்ந்து பேசி காத்தது
மனித தத்துவத்தை....

சொன்ன கடவுளும் அறியாமல்
வந்த கடவுளும் தெரியாமல்
அன்பால் பலியெடுத்து
கடவுளுக்கும் சொல்லி
கொடுத்தனர் மனிதர்கள்
மனித தத்துவதை..

Friday, 25 July 2008

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அப்பாவிற்கு ஒர் கடமை
அம்மாவிற்குத் தெரியாமல்!

அம்மாவிற்கு ஓர் கடமை
அப்பாவும் அறியாமல்!

பிள்ளைக்கும் ஒர் கடமை
யாருக்கும் புரியாமல்!

இப்படியேஆழுக்கெரு கடமை
யாருக்கும் அறியாமல்வந்து சேர!

தனித்தனியே ஆனோம்
பல முகத்தோடு!

கடமையால் குடும்பமாகி
கடமைக்காய் வாழ்ந்ததால்

பொய்யில் சில நேரமும்
மெய்யில் சில நேரமும்

பணத்தில் பாதியும் புகழில் பாதியும்
கடமைக்காய் போக

இல்லத்தில் புன்னகையும்
போலியானது கடமையால்....

கடமைக்காய் வாழ்வு தேடி
வீனாய் போன நாட்களை

கடமையால் வெறுத்து
இன்னும் கடமையாய்


தொலைத்ததை தேடாமல்
கடமை கடமையென
அழைகின்றோம்......

Friday, 11 July 2008

என் பெண்ணே

என் பெண்ணே சின்னக் கண்ணே
அவன் மனசை உன் மனசு
ஏற்றுக் கொண்டேன் என்று!
சொல்லச் சொல்லியதா?

இப்படியே..
அறியாத அறியாமை அறியாமல்
உன்னை படுகுழிக்குள் தள்ளிச் சிரிக்க!
நீ மட்டும் பலர் முன்!அடைமொழி
குற்றவாளியாய் !தோன்றித் தவித்து!
இழந்ததை இருளுக்குள் தேடித் தேடி
ஏமாந்து ஏமாந்து உன் மனசால்
உலகில் ஏமாழியாகி விடாதே
என் பெண்னே!

ஒரு முறை சிந்தித்து எழுந்து
உன் சிந்தனையால் உனைச் செதுக்கி
துயரத்தை எறிந்து நிமிர்ந்து நில்லடி!
என் பெண்ணே!!

நிலையான அழகை இவ்வுலகில்
படைத்திட வெளியழகை நம்பி
உன் அழகை இழக்காமல் வாழ்ந்திட
எழுந்து நடந்திட விரைந் வாடி
என் பெண்னே!!

Wednesday, 9 July 2008

இது தானா வாழ்கை?

காத்துக் காத்து காதல்
செய்து
பார்த்துப் பார்த்து
வாழ்வமைத்து
கொஞ்சி கொஞ்சி இன்பம்
தேடி
கெஞ்சிக் கெஞ்சி
உறவு கொண்டு! வாழ்ந்திட்ட
நம் காதல் வாழ்வு!
பூமியிலே சொர்க்கத்தைக்
கொண்டு வர..

நண்பர்கள் நமைப்போல்
ஜோடி தேட
அடுத்தவரும் அயலவரும்
நமைப் பார்த்து பொறாமை
கொள்ள
கிண்டலும் கேலியும்
மகிழ்ச்சியும் கோபமும்
மாற்றி மாற்றி நாம் கொண்டு
நம்மை நாம் மறந்தால்
பெற்றோம் முத்தாய் குழந்தை
இரண்டு
நம் வாழ்வின் சாட்சியாய்..

பெற்றேராய் நாம் மாறி
நம்மை நாம் மறக்க!
குழந்தைகள் நமையாழ!
இரவு பகல் கண்விழிந்து
அலுப்பிலும் சலிப்பிலும்
அன்போடு அரவணைத்து
அடுத்தவர் கண் படாது
பாதுகாத்தோம் அவர்கள்
வாழ்வை நம் வாழ்வாய்
நாம் கொண்டு! வாழ்ந்திட்ட
காலத்தின் சொர்க்கத்தை
ஏன் நாம் அழித்தோம்?

உன்னில் சந்தேகம்
நான் கொண்டு
என்னையும் சேர்த்து
கலங்கப் படுத்தி
எரிச்சலும் கோவமும்
நான் காட்ட
இன்பம் போய் துன்பம்
வந்து
மகிழ்ச்சி போய் சண்டை
வர
ஆளுக்கொரு கதை நாம்
பேசி! தப்பின் மேல் தப்புசெய்து
இல்லாத உண்மை தேடி
ஏன் தனிமை காத்தோம்?


இல்லத்திலே இனிமை கொண்ட
நம் இல்லம்
சோகத்தால் இருளில் மூழ்கித்
தவிக்க
காதலால் நிறைந்த நம்
பள்ளியறை தனிமை
காக்க
தனித் தனி அறையை
நாமேன் தேட!
உன்னேடு தூங்குவதா?
என்னேடு தூங்குவதா?
எனத் தெரியாது குழந்தைகள்
தவிக்க!
வேலைக்கு போன நானே
உலகமே உறங்கும் வரை
சுற்றி விட்டு வீடு வர
ஏன் என்று கேட்காது நீ தூங்க
உன்னை புரிந்த நானும்
என்னை புரிந்த நீயும்
எப்படி புரியாது போனோம்!
************************தொடரும்......
புரியாது நாம் வாழ்ந்த
வாழ்கை! எம் மீது
எரிச்சலும் கோபமும்
காட்ட! தொலைத்த மகிழ்ச்சி
தேடி இரு திசை போனோம்
நம் திசை ஒன்றெனத் தெரிந்தும்!
வரட்டு கெளரவம் நம்மை
துரத்த......
குழந்தைகளை அள்ளி
நெஞ்சோடு அணைத்த
கை கொண்டு நான் அடிக்க!
என்மேல் கொண்ட வெறுப்பை
குழந்தைமேல் நீ காட்ட!
குழந்தைகள் தவிக்க
அடுத்தவர் எம்மை
சாமானப்படுத்த! கோபத்தால்
நான் கொதிக்க நம் குடுபம்
வாழ்க்கை தெருவோர வாழ்வாகி
போனது நம்மால்......

தெருவோர வாழ்வை கண்ட
உன் உறவும் என் உறவும்
சமாதான படுத்திட முயன்றதால்
வந்தது புதிய சண்டை!
பணத்தின் பெருமை சொல்லி
உன் உறவு என்னை திட்ட
என் உறவு உன்னைத் திட்ட
பணம் மட்டும் பேசியதால்!
நம்மைப் போல் பொறுமையிழந்த
பிரிவு! நிரந்தர பிரிவாய் நம்மை
பிரித்து செல்ல!
குழந்தைகள் உன்னோடு சேர
தனிமையும் இருளும் இல்லத்தில்
என்னோடு நிரந்தரமானதால்!
தனிமை என்னை வாட்ட
உன்னை மறந்திட மது துணைவர
தவறியது மனது உன்னால்...
என்னால்.. நம்மால்...

.........................

Thursday, 3 July 2008

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நிலையில்லா வாழ்வு
இதுவென்று
நிலையில்லா எண்ணம்
கொண்டு
வரையரையின்றி வழி பல
மாறி
தரை விழ்ந்து தடுமாறி
தடம் புரண்டு
தானெழும்ப மதுக் கரம் பிடித்து
தன்னைத் தான் மறந்தான்
அறியாமை மயக்கத்தில்!!
மயக்கத்தால் கண்ட சுகம்
அவனை அழிக்க
வரும் வலி தெரிந்தும்
உடலுக்கு வலி கொடுத்தான்
உள்ளத்தை ஆற்ற தன்
வலி மறந்த அறியாமை
விலங்காய்!!

செய்த பவத்தால் வந்த பாவத்தை
கூடி நின்று ஊர் பார்க்க
குடும்பம் தனை தெரு நிறுத்தி
தள்ளாடி நடந்தவன்
எமனைத் தேடி உயிர்
கொடுத்தான் இறுதிவாழ்வு
புத்தனாய்...