Tuesday, 13 December 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

சுரங்களை அவள் தந்து
சுவாசதிற்கு உயிர்கொடுத்தாள்
மூச்சுக்குள் இசையசைய
தாளத்தை பற்றிவிட்டாள்
பற்றியவள் சென்றபின்
தவிப்பிற்குள் கனமழை சுரங்களாய்
கொட்டுது பருகாலமற்று!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓர் பெண்ணவளின் காலத்தை
வலிகளே ஆள்கின்றது வழிகள்
இருந்தும் ஏனெனில்
வலியதன்
பாதை பழியோடு செல்வதால்1!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணத்தை அணைத்திட
விதியிடம் வழியில்லை
இதயதின்வலியினை அனைத்திட
உணர்விடம் வழியில்லை
வாழ்ந்திட நினைத்திட
வாழ்கையில் இடமில்லை
உயர்திட எழுந்திட புதைகுழியில்
பாதையில்லை! இருந்தும்  இறந்தும்
உயிரோடு ஒர் கனவு!!!