Tuesday, 24 December 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வலிகள்  நிறைந்த 

வழியின்னுடே  ஒருசாதனை 



பயணம்  முற்கள்வழி நடுவே 

கற்கள்வலி  சிற்பமானது 

காலம்  வாழ்த்திட !!!


Saturday, 21 December 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பிடித்தும்   பிடிக்காமல் 

பிடிக்கின்றது  ஏனோ 

என்னை  மட்டும் 

  அவனுக்கு  அதனால் 

தானோ  புரியாமல் 

விட்டு  விட்டே  செல்கின்றான் 

தனிமைக்குள் !சரிதான் 

போடா  என்றே  நான் 

விட்டு விட்டால் அவன் 

தொலைவாய்  இருந்து 

பார்க்கின்றான் அவன் 

தேடும்  ஒன்று  ஏனோ 

நானாய்  பிறக்கவில்லை 

போலும் !!!அதனால்  தான் 

வாழ்க்கை  கண்ணம்பூச்சியாச்யோ 


  


குட்டிக்குட்டிச் சாரல்......,

 கனவென 

 கண்கள் சொல்ல 

 நியமாக  நீயேன் 

வந்தாய்  கனவில்லை 

நியம் தான்  நானென்று 

நீயே  இதயமாய் 

துடிக்கையில்  

என்னை  கனவிற்குள் 

ஏன் தொலைகின்றாய்  !!!


Monday, 16 December 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இல்லையென்ற அன்பை  

தொலைத்துக்கொண்ட 

ஆசைகளை வெல்லமுடிய  

வாழ்க்கை   இல்லறம் !!! 

இருந்தும்   பெண்ணை 

நினையாமல்   வெறுத்தும்  

தேடும் உறவில்  இருந்தும்   

ஏமாற்றும்  இல்லறம்  !! 

இருக்கும்   பெண்னை  

வெறுத்து  வேறு  பெண்ணின் 

கைகள்  பிடித்தே  நடந்தாலும்  

 சலித்த  பின்னே சொல்லும்  

வார்த்தை   இல்லறம்!!!

 சலித்து   சலித்து  

பெண்ணை  சலிக்காமல் 

திட்டும்  இதயம் 

சலிக்காமல்  தேடும்  

வாழ்க்கை  இல்லறம் !!

சொல்லும்  காயம்  

சொல்லி  ஏமாற்றினாலும் 

பெற்றோரின் விருப்பே   

 இல்லறம் !!  

இல்லையென்றே  நின்றுவிட் டால்

இருக்கு  நிமிடம்  தந்து 

செல்லும்  நிம்மதியை  

வேண்டாமென  தேடும் 

இல்லறம் !வேடிக்கைகாட்டும்

விந்தை  கதைகளை  விட்டு 

வாழ  தொடங்கினால்   

பெண்ணிற்கும்  தொலைந்து 

போகவாழ்க்கையாய் கிடைக்கும் 

இல்லறம் !!!


Friday, 13 December 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சட்டென கண்னில்  

பதடுத்தெறித்த  செய்தி 

உண்மையோ  பொய்யோயென 

நினைத்திடமுதல்  விழுந்ததுதுளி

மண்ணை  விட்டுச்செல்லும் 

உயிர்தான்   நிறுத்திட முடியா 

உயிர்தான்  ஆனாலும் 

பிரிவுகள்  நிரந்தரமாகும் போது 

வலிப்பதும்  உண்மையே 

தமிழ்  வந்து  காதோடு 

விளையாட  சொல்லோடு 

உறவாடும்  உறவே நீர் 

உச்சரிக்கும்  தமிழின் அழகு

நான் கற்றுக்கொள்ள  தவறிய 

பிழையென  ஒத்துக்கொண்டே 

ரசித்த  முல்லை  வாசம் நீர் 

 அந்தவாசம்  மாறறு  மண்ணில் 

வாழும் தமிழ் வாசம்  தான் 

இருந்தாலும்  நினைவுக்குள் 

தொலையும்  உம்  நினைவு 

பேச  முல்லைப் பூகள் கொண்டு  

என்  நீரால்  அஞ்சலி  செய்கின்றேன் !!!!


  

Monday, 9 December 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பெண்மைக்கு !!!

இறைவன்  எழுதிய 

மிகக்கொடுமை  

அவள்  மாங்கலியம் 

இங்கே  அன்பான 

உறவின்  உயிர் 

கொடுத்தெடுத்து 

செல்லும்  கோலம் 

கொடுக்கப்போகும்  

தண்டனை  தீயில் 

சுட்டாலும்  தெரியா 

வலியாகும் 

முன்னே  பின்னே 

புறம்  சொல்லும் 

ஆயிரம்  கதை  

விழாக்கோலம்  கொண்டாலும்  

எழுந்து  நடக்க  அவள் 

கற்றுக்கொள்வதற்குள் 

அவளை  மரணம் 

கொண்டுசென்றுவிடும் 

பொய்யாக  நடிக்கவுமுடியாமல்   

 உண்மையாக 

வாழவும் தெரியாமல்  

அவள்  சொல்லா   அவளை 

மனிதா!!

  வாழவைக்க  வேண்டாம் 

வாழவிடாமல்  நீயெரு 

கோலம்  வரையதே 

பாவம்  அவள் 

 உண்மை புரியாமல் 

 உன்னை தெரியாமல்  

நம்பி நம்பி 

ஏமாந்து  ஏமாந்து  

தொலைக்கின்றாள்  தன்னை !!!

அறியாமலேயே  தன்னைத்தானே !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பெண்மை !!

யாரோ ஒருவர்  

தூக்கியெறியும் காகிதபோல்  

விழுகின்றது பலர் 

 கண்களில்  

எடுத்திட !!

கைகள்  துடிப்பதில்லை 

அனாலும்  கால்கள் 

மிதித்திட  துடிக்கின்றது 

தானாய் !!!