Thursday 31 October 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 ஒளியே  உன்னை 

நான் ஏற்றிவைத்தல்  நீயோ 

ஒளிரமறுக்கின்றாய்  

உன்னோடு  போராடி 

இருளோடு  பழகிவிட்டேன்

இப்போ ! எனக்காக   நீயுமில்லை

உனக்கா நானுமில்லை  

மற்றவர்  வாழ்விலாவது  

ஒளிர்ந்து கொண்டே  இருந்திட 

உன்னை  ஏற்றுகின்றேன்

அழகான  இல்லத்தின் 

ஒளியாய்  எப்போதும்  

ஒளிவீசு !

!தப்பென தெரிந்தால் ஏரித்திடு 

 அன்பென இருந்தால்  

அழகாய்  நின்றே ஒளிர்ந்திடு  

 

Wednesday 30 October 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்ன  படித்தோம் 

என்னவாக இருக்கின்றோம் 

என்பதில்லை  நம்  வாழ்க்கை 

நாம்  எதை  எப்படி 

இந்த  உலகத்திற்கு  

கொடுக்கின்றோம்  என்பதே 

வழக்கு !!படித்தும்  

முட்டாளாய்  செய்யும்   

செயலே  ஒரு  இனம் 

தாழ்த்தப்பட காரணமா
கின்றது !! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இவன்   

முதல் கையெழுத்து 

தமிலென்னும்   தலையியெழுத்தை 

மாற்றும்  என்ற  

பல கோடி  இதயங்களின் 

வலிககளின் மேல்  போட்ட 

காப்புறுதி 

தாய்மொழியின்  நீண்ட 

தவம் 

நிறுத்தியாளுமா !!இவன் 

எழுந்து  போட்ட   

கையெழுத்து 
 இல்லை  

இவன்  கண்களின் 

 தெரித்தோடிய  கோவம்  

மாற்றும் 

என  நம்பிக்கை  பூவை 

விதைத்து  புன்னனைகைக்க   

சொல்லுகின்றது !!1



Tuesday 29 October 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நம்பாதே  நம்பாதே என 

அனைவரும்  கூரும்  

நம்பிக்கை  யாரிடம் 

ஏன்??

நாம்  நம்பிக்கையில்லா 

மனிதனானோம்  

பிறவியின்   பிறப்பில் 

உள்ள   பெற்றோரின் 

நம்பிக்கையின்  அர்த்தம் 

ஒரு  பொய்யின் தொடக்கமா 

புரியவில்லை  

ஏமாற்றும் உறவுகளின்  

தொடக்கமும்
முடிவும் !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நமக்குள் உள்ள 

அதிக  வலியே 

நம்மை  சிந்திக்க விடாது 

தடுக்கின்றது  நாம் 

யார்  யாரையே 

நம்பிடவும்  செய்கின்றது 

ஏமாற்றம்  நம்மை 

இன்னும்  பலியாக்கிடும் 

போதே  அறிவு  பேசுகின்றது

திரும்பவும்  காயமாகி 

மீண்டும்  அதே வலிக்குள் 

நாம் !!! 


Friday 25 October 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மணித்துளி  

மரணப்படுக்கையில் 

தனியறை  சிறையில்

பல கிளிகள்  சிறைபிடித்து 

வைத்துள்ளது  பல 

வேடர்களை!!!

அம்புகள் களவு

போனதால் 

 அன்புகள்  வில் பட்டு 

விழிகளுக்குள்  விழுந்து 

விட்டனர்   வேடர்கள் 

இங்கே 

தடைசெய்யப்பட்டுள்ளது 

கற்றுக்கொள்ளும் 

வாழ்க்கை !!!

   

குட்டிக்குட்டிச் சாரல்......,

 ஒரு  நாள்  

ஒரு நிமிடம்  

எனக்காய் 

 பூக்கள்  தரும் 

வாசம்  வீசும் 

தென்றல் வாங்கும் !!

இவள் உயிர் 

அன்று  பூக்கும்  

இவள் ஆசைகளாய் 

பலர்  கனவுக்குள் !!!
  


Thursday 24 October 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 இறையே !!

  என்  சந்தோஷங்கள் 

மரணத்தின்  பின்னரோ !

அப்படியென்றால் !

 எனக்கு  இப்போதே  

மரணம்  வேணும் !அங்கே 

அப்பா  கைகள்  பிடித்தே 

நடந்த நாட்கள்  மீண்டும் 

கிடைத்திடும்  எனக்கும் !

அண்ணன்  அன்புக்குள் 

அடிமையாய்  வாழ்ந்திட 

மீண்டும்  பூக்கும் வசந்தம் 

எனக்குள்!

சிந்தும்   நீர்  

பொய்யோ மெய்யோ  

என  சிந்திக்காமல்

என்  மாமான்  காதல் 

கிடைக்கும்  எனக்கும் 

மடிதூங்கியே   கதைகள் 

நான்சொல்ல  

கதையைக் கேடாலும் 

மாமன்  மடிதூங்கிட   

செல்லச்சண்டையிட்டு 

போட்டிபோடும்  மகளோடு  

மீண்டும்  வாழ்திட இப்போதே  

மரணம்  வேண்டும் எனக்கு !!!



 

 



Tuesday 22 October 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஒவ்வேறுமுறையும் 
அவள்  
தலைசாயும் மடி  
அவள் 
சண்டையிடும் 
மகனே  
ஒவ்வருமுறையும்
 நலமானதும் 
சண்டியிடும் 
 முதல் ஆளும்  
மகனே 
ஆயிரம்  காயங்களை 
கடந்தாலும்   
சொல்லாமல் துடிக்கும்  
அன்பும் அவனே 
சொல்லி  சண்டை  
போட்டாலும் 
 கண்ணீரை  கண்டதும் 
துடிக்கும்  இதயமும்   
அவனிடமே 
அன்பை   மட்டுமே 
கேட்டவளுக்கு  
ஒற்றை  மகனை 
மிச்சமாய்  விட்ட 
இறைவனுக்கு  நன்றிகள் !

Monday 21 October 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள்  தேடிய கனவு 

கானல் போல்  மறைந்ததால் 

அவள்  பாலை வானத்து 

பட்டாம் பூச்சியனால் !!

Saturday 19 October 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவள்   புன்னகைகளை 

கேட்டிடும்  இதயங்களுக்கு 

தெரியவில்லை 

 அவள் 

புன்னகைக்குள்  மறைந்துள்ள 

பொய்யில்லாமுகம் 

அவள்

 கனிவான  பேச்சுக்களை 

ரசித்திடும்  இதயங்களுக்கு 

தெரியவில்லை

  அவள் 

மௌனங்களுக்குள்  மறைந்துள்ள 

பொய்யில்லாமுகம் 

அவள்

  சொல்லும்  பொய்களை 

ரசிப்பவருக்கு  தெரியவில்லை 

அவள் 

 உண்மையான முகம் 

அவள் 

ரசனைகளை   தொலைத்து 

மற்றவருக்காய்  நடிப்பது 

அவளை  புரிந்தவருக்கும் 

 புரியவில்லை  அவள் 

மற்றவர்  மகிழ்ச்சிக்காய் 

நடிப்பது 

அவள்  வாழும்  வரை 

யாருக்குமே  அவளை புரிந்திட 

போவதில்லை! ஏனனில் 

அவள்   

இறைவன்  எழுதி

புரியாமல்  தூக்கி எறிந்த 

புத்தகம் !!!

 



Friday 18 October 2024

மொழியின் ஊமைக்குள் ஒரு கனவின் சாரல்

 நமக்காக  யாருமேயில்லை 

என்னும்  போது  வலிகளை 

தாங்கிட  முயலுகின்றது 

மனசு  

எல்லோரும்  இருந்தும் 

இல்லாமல்  அழும்போது 

வலிகளை  தாங்கிடாமல் 

துடிக்குது 

 மனசு 

 இருப்பதாய் 

சொல்லுபவர்களுக்கும் 

இல்லாமல்  போனவர்களுக்கு 

இடையில்  விழிகள் 

சிந்தும்  சாரல்   மொழிகள் 

மட்டுமே  ஊமையாய்  அழுகின்றது 

மனசுக்குள்ளேயே !1
 




Thursday 17 October 2024

,குட்டிக்குட்டிச் சாரல்......,

 ஒவ்வேறு  முறையும் 

ஒவ்வேறு  உறவும் 

பணம்  தான் வாழ்க்கையென 

புரியவைத்தாலும்  

ஒவ்வெரு  முறை  

ஒவ்வேறு  உறவிடம் 

என்  ஏழ்மை  தோற்றாலும் 

ஒவ்வேறு  முறையும் 

என்  அன்பில்  

பொய்யில்லை   அது 

இன்னும்  ஏமாறவே 

காத்துக்கொண்டே  இருக்கின்றது 



குட்டிக்குட்டிச் சாரல்......,

 பிடித்தவையாவும் 

 பறிக்கப்பட்டு 

பிடிக்கா  வாழ்வை  

எனக்கெழுதிய இறையே  !



ஒற்றைபோராடடத்தில் 

கொக்கைப்போல் 

 காத்திருக்கின்றேன் 

ஒரைநொடியில்  நீ   உயிர் 

பயணத்தையாவது 

பரிசாய்  தருவையென  !!1


Tuesday 15 October 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அவள்!!

 கனவுக்குள்  கூட 

அவள்!!

 வசந்தங்கள் 

இறந்தே  கிடக்கின்றதே 

யாரும் திரும்பிப்பாரா

 அவள்!  திரும்பிப்பிக்கின்றாள் 

மூழ்கிப்போன  அவள்!

கண்கள்வழியே  தூரமாய் 

மின்னுகின்ற  ஒரு 

மின்மினியை !!! ஒரு 

இருளை அழகாக்கிட 

பிறந்தது  போல்  துடிக்கும் 

சின்ன உயிரின்  துடிப்பு 

அவள் !!

 விழிகளுக்கு  அணைகட்டுகின்றது !



விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

தன்னை  நேசிக்கும் 

ஒரு  பெண்ணை  

ஏமாற்றி 

இன்னொரு  பெண்ணுடன்

பொய்யாக 
 

வாழும்  வாழ்கை   

பெருமைக்குள்  

ஒரு  ஆண்மை 

சிறந்து  நிற்க்கும்  

பெருமை 

ஒரு  பெண்மையின்  

அழிவின்  தொடக்கம் 

இந்த  மண்ணில்  மட்டும் 

சாதாரணம்!  

Monday 14 October 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

தனக்கான  தன்னை 

யாரோ  எடுத்து 

உடைத்தெறிந்து  போட்ட

துண்டுகளில் அவள் 

தன்னை  தனித்தனியாக 

பார்கின்றாள்!!முதல் முறை  

 அவளுக்குள் இருந்த  

பெண்மை உடைந்து  

அழுகின்றது !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 இவள்´!

 ஏன்ன  இப்படி 

இவளுக்கு  என்ன

என என்னும்   

சிந்தனைகள் 

சிந்திக்க  மறந்த 

பக்கங்களுக்குள்   

இவள்  மறைந்துள்ளதை   

யாரும்  சிந்திக்காததால் 

இவள்  வாயடியானால் !!

Friday 11 October 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என்னை செதுக்கிய  

இறைவன்  முன்னே !

 நானும் 

ஒரு  கல்லாகின்றேன் 

கல்லானாவன்   கருவறை 

இருள்போல்! அவன் என்னை 

கருங்கல்லில்  வடித்து 

வண்ணங்களை  கொடுக்க 

மறந்து  என்னை 

பூ தோடத்தின் 

வர்ணங்களின் நடுவே 

நிறுத்திவிட்டு  மறைத்து 

 விட்டதால்  என்  

உயிரற்ற  உணர்வுகள் 

பேசிடா  

கல்லுக்குள் நானும் 

வாழ்கின்றேன் 
!!

Wednesday 9 October 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

எனக்குள்  வாழும் 

என்  அழகிய  உயிருக்கு 

வலிக்கும்  போது  அதைவிட 

 வலிகள்  நிறைந்த 



ஒரு  உயிர்  என்  முன்னே 

வரும்  போதெல்லாம் 

புரிக்கின்றது இறைவனை   

வலிநிறைந்த முற்கள்  

கல்லெறிந்தாலும் 

உடைய  கல்லும் !!ஒரு 

படைப்பின்  அற்புதமென !!!


Monday 7 October 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

எல்லாம்   புரிந்தவர்களே 

 புரியாமலே  நடிக்கும்

 உறவில்தான்  அதிக  

காயம்  !!

Saturday 5 October 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,


 அப்பா  பாதச்சுவட்டிக்குள் 

கால்பதித்தே  நடந்த அழகிய 

நாட்கள் 

அண்ணன் கைபிடித்து 

நடந்த அழகிய 

 நாட்கள்

தந்த  அழகிய அன்பினை  

அவர்களே

எடுத்து  சென்றுவிட்டார்கள் 

போல !!

 இழந்த  அன்பினை 

இதுவரை  நான் யாரிடமும் 

உணர்ததில்லையே 

ஏன்   இறைவா!!!இதுவரை 

தோப்புக்குள்  ஏனோ 

தனியாக  வாழுகின்றேன் !!

இழந்தவை  திருப்பக்கிடைக்காது 

என்பார்கள் 

திருப்பிய கனவானது  ஏனோ !!!

இன்னும்  சிறுவயது  தந்த 

அந்த  அழகிய  வாழ்கையே  

எனக்குள்  அழகிய 

நினைவாய்  வழுக்கின்றதோ 

திரும்ப திரும்ப கனவாகியே

  பூப்பதால்  !!!


Friday 4 October 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

மனசில்   நின்றாடுது 

 பல கேள்விகள்  

பதில் இல்லாமல் 

இறைவா !

 உன்னோடு பகையாகி 

 என்னோடு வெறுப்பாகி 

 என்னையே  கேள்வியாக்கி 

விடையின்றி  தவிக்குது

 இறைவா !!

என் விதியின்

 பொருள் என்ன  

இன்னும் 

உயிர் கொடுத்து 

உயிர் வாழ  

இவள் 

வாழும்  வாழ்க்கையின் 

அர்தமென்ன  

கனவோடு கரைகின்ற 

கனவுக்குள் 

விழுகின்ற  துளிகள் 

சொல்லும் உணர்வுக்குள்  

புரியாமல் புகுந்துகொண்ட

  கேள்வியாய் 

நீ  

பார்ப்பதென்ன 

பொய்யாக  அழுதலே 

மெய்யாக  துடித்திடு 

உறவுகளை  மரணிக்க 

வைத்திட்டு  

மெய்யாக  அழுதாலும் 

பொய்யென  சொல்லும் 

உறவுகளோடு  வாழந்திடும் 

வேடிக்கை வாழ்வை  

வேண்டாமல் வாழ்ந்திட  

சொல்வதேன்  

இறைவா !!

கொண்ட  உயிரில் 

பாதிக்கலாம்  முடித்தபின்னு 

மிதிக்காலத்தை  கொண்டுதான் 

போவேன்  இறைவா !!!



Tuesday 1 October 2024

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 மாமன்  கைபிடித்து 

மாந்தோப்பு   காற்றாட 

மெல்ல  நடக்கையில் 

மல்லிகை பூக்கள் 

கண் பட்டு  நிலமுகம் 

ஏன் புன்னகைக்கு 

தனியாய்!  விழுந்த 

நிழலுக்குள்  ஏழுந்த  சிற்பம்  

பார்த்தலோ !!!இல்லை 

உதிரும்   பூக்கள்  ஏங்கியே 

வாடிச்செல்லாக் கோவம் 

கொண்டு விழுவதாலா  ! இல்லை 

மாமான் கொஞ்சிடும்  

கொஞ்சல்  மொழி  கேட்டதலா..... !