இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday, 30 January 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
இழந்திட்ட பின்னும் இறக்கிட
மனமின்றி சுமக்கின்றேன்
எழுதியவன் கைகள் என்றாவது
ஒய்ந்திடும் என்ற நம்பிகையினை
சுமந்து கொண்டு!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
என் காதல் தோல்விக்கு
ஒரு பாலைவனம்
காதல் சின்னத்தை அமைத்திட
இட ஒதுக்கிட்டை தந்தது!!
அங்கு தான்
எந்த மனிதனும்
கற்பனைபொய்களை
அறிவித்திட தேடமாட்டான்
என்பதால்!!!!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
சிந்திய தீயில் எரிந்த
காயத்தால் விழுந்த
உதிரத்தை ஏந்திய
தென்றலே என்
வாசத்தின் இதழ் திறந்து
கண்மணியின் நேசத்தை
பூக்களின் வாசதில் வீசி
என் நேசத்தை வென்று
உன் கல்லறைக்குள் சிறை
வைக்கின்றாய்!வீசிடும்
அலைகலெல்லாம் என்னை
அள்ளிசெல்லாது தடுத்திடவா!!!
Friday, 26 January 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
அள்ளிக்கொள்ள
மாமான் நெஞ்சம்
துடிக்க
தூக்கி சுமக்க
தோல்கள் துடிக்க
கொஞ்சி பேச
இதழ்கள் துடிக்க
கைகள் பிடித்தாள்
மாமனின்
உயிரை சுமக்க!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
கண்மணி விழியேரக்கனவே
நீயேன்
சுமையானாய்
இரவுகள்
பகலாய் ஆச்சி
கற்பனைகள்
தொலைவாய் போச்சி
கவிதைகள்
உறங்க போச்சி
காகிதங்களில்
உன்னைக்கிறுக்க
கண்ணீர் வந்து
கடலாய் மூழ்கிபோச்சி
இருந்தும் ஒரு
விடியலைத்தேடுது மனசு!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
அரக்கன்!
இறைவனிடத்தில்
வரத்தை பெற்று
இறைவனேடு
சண்டை போட்டே
தன்னை அரக்கனென
நிருபித்தன்
மனிதன் தனே தனக்கு
வரத்தைக் கொடுத்து
தன்னையே அழிக்கின்றான்
அன்று!! உயிராய் இறைவன்
இன்று!!கல்லாய் நிக்கின்றான்
இது தான்மாற்றதில் உலகம் !!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
உயிர்
இருக்கும் வரையறியவில்லை
நாளைய விடியலின்
கொடுமைகளை
கற்கும் வரை புரியவில்லை
மனங்களில் மறைத்துவைத்துள்ள
ஏமாற்றதை!
புதைக்கும் வரை
புரியவில்லை
ஒரு உயிரின் இழப்பை!
இப்போ
அத்தனையும் கற்றிட செய்தது
தனிமை!!!!!
Wednesday, 24 January 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
உண்மை
உயிரைக் குடிக்க
வாழ்கை
தொலைத்த வெறுமை
நேசதின்
வெறுப்பை கற்று தந்தது!
குட்டிக்குட்டிச் சாரல்......,
ஆசைகளை அள்ளியே
பாதையெங்கும் விதைகின்றாள்
அள்ளிய ஆசைகளை
கேட்டிட யாருமற்ற
பெண்ணாய் வீழ்ந்ததால்
பல
இதயங்களிலாவது
பூத்திடப்பார்த்திட!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
மொழிகள் உயிர்பெற்றதால்
வலிகள் ஊமையானது
வலிகள் உயிர் பெற்றதால்
மொழிகள் ஊமையானது
குட்டிக்குட்டிச் சாரல்......,
மாயமான் மயவின்பம்
உடைதிட முடியாததால்
பொய் மானாய் ஆனதது மான்
பொய்மானாய் கண்டவன்
கல்மானை கவிவடித்து
உயிர்மானை கொன்றான் உண்மைறியாமல்!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
நினைவுகளை கசிக்கியெறிந்திட
எழுந்திடும் பொழுதெல்லாம்
இதயம் தவிக்கின்றது
எதையெறிந்தாலும் உன்னை
வெல்ல முடியாததால் தான்
உயிரைக் கசக்கினேன்!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
சில வசந்தின் துறல்
வாழ்கை கைவிடும் போது
வாழ்கைக்குள் மரணத்தை
வென்றிட தேடுது!!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)