Wednesday, 27 July 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உண்மை பொய்யின் அழகில்
தோற்றிடும் போதெல்லாம்
யெத்திடும் என்பது உண்மையானாலும்
உண்மையெத்திட எடுத்திடும் காலத்தாலே
வெற்றிபொய்யின் உண்மையாக்கி
விடுகின்றது!!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னால் வாழ் கறபனைகள்
எந்த வறுமைக்கும் உணவாகாது!!
உன்னால் வாழ் உழைப்பே
உன்னைல் வாழ் உறவின் பசிக்கு
உணவாகும்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

புரிந்தவன் கைகள்
உயர்ந்தால் இருள்கள்
சூழாதே  காத்திடும்
இணைந்திடும் கரங்கள்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தீக்குள் தாரை தாரையாய்
கொட்டிய கண்ணீரையும்
தாருக்குள்புதைந்த உடல்களையும்
அள்ளியொடுத்து  குவித்த மனிதநேயத்தால்
கொட்டிய உதரத்தை  வாய்க்கால்
வழியனுப்பி  வாய்திறக்காதே அழுது
ஆண்டவன் அடிமையாய் காலகாலமாய்
கண்ணீர் கதையெழுதி தவிக்குது
தன்னை சிதைத்து !!
பொல்லாப்பு புதுப்பாதை  தனக்கான
தன்திறமை என்னவென யார் காண்க!!
வாழ்கை வாழ்தேசம் தன்னையாழ்
சிறப்பெய்தவன்  சிதைகனவு
நாரைகாண் வாழ்வாக 1!
அடிமை நிழல்ஆடம்பர வாழ்
பொதிசுமைபணம் பொருமைபாபுகழ்1!
தன்னை தான் சிதைக்க
உயிர்யெழுத்தீத்தாய் கறுப்பு யூலைக்குள்
ஆடம்பர குடைபிடித்தால்
மனிதம்  தன்னைகாக்காமனிதர்களால்
தொலைந்தது  தவிக்குது விடுதலையின்றி!!!!





Thursday, 21 July 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொட்டில் இட்டு தாலாட்டி
தோல்மேல் சீராட்டி
பத்து மாத சுகம் தந்து
நெஞ்சினில் மூச்சானவளே!
உன்னை சுட்டெரித்த தீ ஏனடி
இன்னும் என் இதயத்தை சுற்றியெரியுது!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொய்யான உறவுக்குள்
உண்மை உறவானவளே
நிலையில்ல மகிழ்விற்குள்
நிலையான துயரமானவளே
நிலையற்ற சிந்தனைக்குள்
நிலையான தவமாய் இருப்பவளே
என் நிலையா செல்வம் நீதானம்மா

குட்டிக்குட்டிச் சாரல்......,

வார்தைகளை நான்  தேட
கண்ணீர் துளி எனைத் தேட
நினைவுகள் உனைத்தேட
கட்டியணைத்திட கைகள் தேட
ஆண்டுக்குள் நீ தொலைந்து
வருடங்களாய் காத்திருப்பதை
உன் வயது சொன்னதடி என் சொல்லமே!!!!

Saturday, 2 July 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

கசங்கிய ஆடையில்
ஆற்றல் வந்து ஆளுமை
கொண்டதால்
 ஐயாயிரம் திண்ற 
ஆடைக்கு தலைகுனிவு
 வந்தது !
வழியதன்  திறவுகோல் 
வாழ்விற்கு  மதியாய் 
நிக்கின்றதால்  வறுமைக்கும் 
வாழ்க்கை  நன்றாய்  ஆனது  !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தாமரைதண்ணீராய்
 தாவணிக்கனவுகள்
தனியானபோதும்
மதியதன்அகம்தனை
இருள் வந்து  சூழ்தபோதும்
வறுமைக்கு ஆடை
சரியாக கிழித்தபோதும்
நம்பிகைஒளியென்றை கயிராய்
பற்றியவள் நடை பார்த்து திரும்புது
ஆயிரம்முகங்கள்!!!