Thursday 18 April 2013

ராதையின் விழி பேசும் சாரல்,


ராதையிவள் கண்ணின்
மொழிநடையழகில் கவியெடுத்து
கண்ணன் குழலிசையின்
மெட்டென்றை பாட்டாய்
சட்டென தொட்டு விட!
காதலாலால் தென்றல்
பட்டென இசையாய் இதழ்விரிக்க!
கருவிழி கவியழகை  ராதை
நடையழகு இடைதொட்ட
நாட்டியம் தாள நடையழகில்
பதம் பிடித்து  சிற்பி செதுக்கா
ஒவியமாய்காதல்க் கதையொன்றை கண்ணன்
மொழியழகுத் தமிழாய் இசையோடு
இணைநடையழகில்  காதல் உணர்வழகு
ஊமை மொழியழகில் குரல்ழகாய்
அலையழகில் ஒளிக்க!
பசுவோடு புல்லும்  பசியேின்றி
கண்ணன் இசைகேட்டு
நிற்கின்றது  அசையாது.............


No comments: