Tuesday 12 March 2013

வருமா

இளமை காலம் மெல்ல
என்னை விட்டு போகின்றது
என முதுமை  என்னை தொட்டு
சொல்லாது மாறும் நரையின்
சிரிப்பாய் என்னை எச்சரித்தபோது
இல்லாத பித்தம் சும்மா கொஞ்சம்
விளையாடி சென்றதாய் எண்ணியது தப்போ!!

உடல்சோர மனம்சோர தடுமாற்றம்
வந்து சடுகுடு ஆட
மறதி வந்து பள்ளாங்குழியாட
என்னவென புரியாது சிந்தனை
வந்து வந்து  குழப்ப
அசதியாய் ஓர்மனசு சும்மா உக்காருவென
 சண்டையிட்டது இதற்கு தானா?

களைந்து போகின்ற இளைமையை
கையமர்தி விளையாட முடியாத
காலமிதுவென கைகாட்டிசொல்லியதை
கேட்காது  மனசு கையாடி நின்றது
கையெடுத்து வேலைசெய்யாது போகும்
காலம்  எனி சொல்லாது வரும் என்பதாலா?

நில்லாத  ஓர் கேள்வி
என்னை வாட்டியா ட  சும்மா நின்றாலும்
போனாலும் வந்தாலும்
பொல்லாத வியாதியெல்லாம் இப்ப
 கும்மிகொட்டி ஆடத்தேடுவது  இதற்காகவா!!

பசியறியா வயிறும் பயமறியாமனசும்
 பசியோடும் பயத்தோடும்
கிளித்தட்டு போட்டியென்றை என்னோடு
வெற்றியின்றி விளையாடுவதும்  இதற்குதானா?
 !!!
இது பொல்லாத காலம்  இளமை நில்லதாது போவதை
வறுமைக்கு சொல்லாது போனதால்
கடன் கல்லறை கட்டியபின் மனம்  புரிந்து கொண்டு
என்பயம்!!!!!!!!!!!





2 comments:

Gm said...

vazhthukkal thozhiliye... my site www.tamilkangal.blogspot.in

சு.கஜந்தி said...

நன்றிகள்