Thursday 19 August 2010

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அன்னை மடி.......

எடுத்து அடி வைக்க
எட்டிக் கைகள் பற்றியவன்

அடுதடுத்து அடி வைத்து
விழுந்து  என்னைக் கட்டியவன்


பிடிந்த கை விடுத்து
விறு விறுவென்று நடந்தவன்


கண்ணாம்பூச்சி தானாட

என் கண்கள் தனைக்கட்டி
இருளில்  தன்னையெழித்து
பொய்யாய் அழவிட்டு கட்டியணைத்து
சிரித்தவன்


படிக்க  நான் அழைக்க பல கதை

தான்பேசி  பொய்யாய் நடித்தே
அடிக்க எடுத்த தடியை 
உடைத்தே எறிந்து படிப்பை
மறக்க செய்தவன்


இரவு  வந்து இருளைக் கன்டு தனித்து

தான் நடக்க பயந்து
என்னைத்தேடித்தேடி அழுபவன்


சில நேரம்  பிரிந்தால்
தாவி அணைத்து எனக்கு
முத்தம் தந்து  சிரிப்பவன்

இப்போ
குழந்தையவன் இளமை பிறக்க
ஆண்மை எட்ட அன்னை மடி விட்டு
மெல்லத் தொலைகின்றான்
தன்னை மறந்து....

No comments: