Saturday 21 August 2010

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்...................


தன்னம் தன்னிய என்னை விட்டு
பணம் தான்  வாழ்கையென
பட்டணம் போனமாமன்!! பட்டிக்காட்டுபெண்ணை
பத்திரமாய் வைத்திட்டு
பத்தோடு பதினென்றாய் மறந்ததேனோ!!

பத்துத்திங்கள்  கடத்தும் என்
பக்கம் வராது நிற்கும் மாமன்!
மாமன்பெயரை 
 சொல்லிச்சொல்லி 
 பைத்தியக்காரியாய் ஆனபின்னும்
 பணத்தைத் தேடியழைவதேனோ !!

ஆட்டுக்குட்டியோடு ஆத்தங்கரை
ஆலமரநிழலென வானம்பாடியாய்
திரிந்தவளை
 நாலுசுவர் சிறைக்கைதியைப்போல்
தன்னம் தனியாய் வைத்தோன் 

 தூக்கம் தொலைத்து
விடிய விடிய நிழலோடு  கதைபேச
வைத்த மாமன் ! விடிந்தும் விடியாது
விட்டுப்பிரித்த  கனவைபோல்  
நிற்பதேனோ!!

விடிகாலையெழுதோடு  வீதியில்
விளையாடித்திரிந்தவள் 
சிலையாகி மாமன் வரவிற்காய்
 நிற்ப்பதை  கோழிகண் தாடிகாரனும் 
மெட்டைமண்டையனும்
வெட்டிபயல் சோம்பேறியனும்  உத்து உத்து
பார்த்து முறைக்க!! என்னை
விட்டு போன மாமன் மட்டும்
 பணம் பணமென அழைவதுதேன்
எப்போடா என் பாசம் 
புரிந்து மாமன்  என்நேசம்காண 
தேடிவருவான் இந்த பணத்தை 
மறந்து,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
 

*******************************
அலைகடல் ஓசைபோல்
அலை அலையாய் அலையும்
என் மனசு தெரிந்த மாமா
அதிகாலை போய்
திங்கள் முகம் சிரிக்க்
வருகின்றான் எனைத் தேடி!!
தேடித்தேடி பொருள் எடுத்து
பார்த்து பார்த்து நான் சமைத்து
பூத்த கண்ணும் தவிக்க
காத்து காத்து கரைமேல் நின்றவளை
யோசிக்காத என் மாமான்
எனைத்தேடி யோசிக்காமல்
வருகின்றான்!பார்!!!

ஏக்கம் மறைந்து கோவம் சிரிக்க
வந்து சேர்ந்த மகிழ்ச்சியோடு
எட்டப் பார்த்த மாமானை
விட்டு விலகி  எட்டி நடக்கின்றேன்
கொண்ட கோவத்தால்!!

வந்த மாமான் கொஞ்சம்
தவிக்க நீண்ட கோபம்
விட்டு விலகும் வரை......

*******************************


வீரவாள் பேச்சோடு
வெற்றிவாள் கண்ணோடு
அரிவாள் மீசையோடு
கட்டுக்கடாக களையாய்
கட்டி போட யாருமின்றி
சுற்றி திரிந்த என் மாமான்
விட்ட வாள் கூராய்
மனசுக்குள் யாரோ வந்தது போல் 
தந்நி தவவளுகின்றான் 
இல்லாத பொய் சொல்லி
வந்ததெரு நிலவின்
வாசம் தேடி மல்லிகையும்
கையுமாய் சின்னபெண் பின்னால்
திரியும் மாமனின் ,
செல்லப்பெண்ணிவள் 
இல்லாத்தொல்லையின் தொல்லையான 
மாமான் மனசின் 
கள்ளச்சிரிப்போடு இருப்பவள் எனறும் 
கற்பனைக்குள் மாமானை கட்டிவைத்து
சுண்டியிழுத்து கற்பனை கதை மடிப்பில 
எனறும்  இருப்பாள் தனியாய் 
 

2 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை!!

சு.கஜந்தி said...

தொலையும் நேரம்
விட்டு சொல்லும் கிறுக்கள்களை
பார்த்து ரசிக்கும் உங்கள் மனசுக்கு
நன்றிகள்