Saturday 21 August 2010

நிலவோடு ஓர் சாரல்.......


காத்திருந்த கனாக்காலம்
காரிருள் கார்காலத்தி ல்
பூத்திருந்த  பூவவையவள்
கையிக்குள்  கைசேர!!

வாடி நின்ற மதியவள்
வார்தையற்று மெல்லச் செல்ல
பூந்திருந்த நிலவெளி யில்
காளையவன்  கரமிருக்கி  கதைபேச!

சில்லென்றதென்றல் கொஞ்சம் தட்டி
விளையாட! பட்டெதெறித்த 
குளிர் காற்று ஒட்டி உரசி 
உறவாட!!

வெட்கி குனிந்த நாணம்
வீட்டை விட்டு  வந்து  காதல்பேச
சுற்றி நின்ற  கடல் மெல்ல உறங்கி
தலைசாய்க்க  விட்டுப் பிரித்த  காலம்
முட்டி மோதி விடைதேட 
தட்டிக்கழித்த காலம் கெஞ்சி கொஞ்சி
நிக்கின்றது முன்னோ .....................

 ***********************************

  இரக்க மற்ற இதயமென்று
நிலாப்பெண்ணை  சிறையெடுத்து
 இரும்புமனம் கொண்ட
சங்கிலியால்  இருகரம் 
தனைக் கட்டி பூக்கொடுத்து 
மலர்பறிக்க பூவோடு
பெண்ணவளைகுளிர் நிலவில்
தவிக்க விட்டு  அரக்கனாய்
காத்திருக்கு  இரு மலரையும்
அழித்தழடவே!!!..........


*************************************

தொலை தூரத்து வானம்
தொலைந்திடா நச்சத்திரம்
வந்து வந்து போகும் நிலா
கண்டு கண்டு ரசித்திட்ட
நாட்கள் .........


உன் நினைவைச் சொல்லிச்
சொல்லி வாட்டுதடா...
எனைச் சிறையில் தள்ளி
சிரிக்குதடா...


என் மனசெல்லாம்
உனைத் தேடுதடா
இல்லையென்று அறிந்தும்
ஏங்குதடா......


சொல்ல முடியா சோகம்
எனை வாட்டுதடா
என் இதயம் எனை மட்டும்
கேள்வி கேக்குதடா


யாரும் இல்லாத் தனிமை
எனைத் தாக்குதடா
உனைச் சேரும் காலம்
எங்கேயெனத் தேடுதடா...
இறப்பின் நாட்கள் தெரியாது
தவிக்குதடா என் இதயமே.......

*************************************
மெல்லிடையால் !!
தன்னை தான் மறந்து
நிலவெறிக்கும் நேரத்தில்
ஆற்றங்கரை யோரமாய்!
மன்னவன் கனவோடு
குளிர்நிலவெளியில்
மெல்லிடை அசைத்திட
மெல்லன காலெடுத்து
மெல்லமாய் நடக்கையில்!
 அங்கோர்சத்தம்!
 அவள் கனவைக் கலைந்திட
வந்தது மானோ புலியோ
சிங்கமோ முயலோ என
மான்விழியாள் மிரண்டு தவித்தொடுகையில்

தவித்தள் பூந்தேகம் தொட்டு
தனக்குள்  இழுத்தணைத்திட்ட
 மன்னவன் செயல் இனியவளின் பயம் போக!

இரவின் மயக்கத்தில்
தூக்கமின்றி தவத்த நாணல்கள்
பார்த்து நாணி தலைகுனிந்தன
அவர்கள் நாணம் தாம்
கொண்டு அணைத்தவன் செய்கையால்....
******************************

வாழ்கையாய் நான் மாற
சோகங்களாய் நீயும்
வந்தாய்

மெளனங்களாய் நான்
மாற! மொழியாய் நீயும்
வந்தாய்

கவியாய் நான் மாற
கருவாய் நீயும் வந்தாய்
இருளுக்குள் நானிருக்க
ஒளியாகி நீயும் வந்தாய்  !இன்று
ஒளியாய் நான் மாற
மேகத்திற்குள் ஏன்மறைந்தாய்.....
**********************************

அக்கம் பக்கம் தெரியாமல்
பக்கம் பக்கமாய் கவியெழுதி
உனக்காய் பத்திரமாய்
வைத்தேன் என் தலையணைக்கடியில்

நீ பக்கத்தில் வந்தவுடன்
அத்தனையும் காட்டி
என் காதலை கதை கதையாய்
சொல்ல.......

ஆனால் ....
அக்கம் பக்கம் அறியாமல்
இரவிற்கும் தெரியாமல்
என் விழியிரண்டும் அழுதழுது
வடிந்த நீரில் அத்தனையும்
அழிந்த போது புரிந்தது எனக்கும்
என் பக்கம் புரியாமல்
பக்கத்தில் இல்லாத உனக்காய்
நான் பக்கம் பக்கமாய் எழுதியது
தப்பென்று.....................

No comments: